டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அவருக்கு இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அனைத்து சம்மன்களையும் சட்டவிரோதமானது என கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துடன், அமலாக்கதுறையில் ஆஜராவதையும் தவிர்த்து வந்தார்..
undefined
இதனிடையே இந்த சம்மன்களை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்று சோதனை செய்த அதிகாரிகள் 2 மணி நேர விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் எதிர்கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது: மம்தா பானர்ஜி கண்டனம்!
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியைச்சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியில உள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள செல்போன் டவர் மீது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கவிதா மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்..
முன்னதாக மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மியின் உயர்மட்ட தலைவர்களான முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டள்ளனர். மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் பலமுறை அடிபட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதுபான கொள்கை வரைவு செய்யப்படும் போது முதலமைச்சருடன் தொடர்பில் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்க நரேந்திர மோடி அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.