புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐ.ஜி. சந்திரன் பாஜகவில் இணைந்தார்!

By Manikanda PrabuFirst Published Mar 17, 2024, 4:21 PM IST
Highlights

புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐ.ஜி. சந்திரன் பாஜகவில் இன்று இணைந்துள்ளார்

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளரை அறிவிக்க உள்ள  நிலையில் புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐ.ஜி. சந்திரன் இன்று பாஜகவில் இணைந்தது புதுச்சேரி அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை பொதுத்தேர்தலுக்காக அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தைதொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் ஆளும்  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் போட்டியிடவுள்ளார். வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. ஓரிரு நாளில் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி காவல் துறையில் ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான சந்திரன் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாஜக vs காங்கிரஸ்: தேர்தல் வரலாற்றில் வளர்ச்சியும், வீழ்ச்சியும்..!

ஐ.பி.எஸ் அதிகாரி சந்திரன் கடந்த 34 ஆண்டுகளாக புதுச்சேரியில் எஸ்.பியாகவும், டி.ஐ.ஜி மற்றும் ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு மாநிலஙகளிலும், யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையில் உயரதிகாரியாக பணியாற்றியவர். மேலும் தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளராகவும் பல மாநிலஙகளில் பணியாற்றியுள்ளர்.

பாஜக மக்களவை தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரி சந்திரன் பாஜகவின் இணைந்துள்ளது புதுச்சேரி தேர்தல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவின் ஒரு தரப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!