எதிரிகளை தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு கடந்து செல்வேன்; தமிழிசை அதீத நம்பிக்கை

By Velmurugan s  |  First Published Mar 19, 2024, 7:25 PM IST

தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன், அது நான் சுயமாக எடுத்த முடிவு. யார் நிர்பந்த்திலும் எடுத்தது கிடையாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


தமிழிசை சௌந்தர்ராஜன் தனது தெலங்கானா ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு இன்று மீண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வந்தடைந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்கள். அந்த அன்பு தொடரும் முடிந்து விடாது. புதுச்சேரியில் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. 

எந்தெந்த வகையில் புதுச்சேரி மக்களுக்கு நல்ல திட்டங்கள் அளிக்க முடியுமோ அத்தனையும் மனசாட்சியோடு அனுமதி அளித்திருக்கிறேன். புதுச்சேரியில் மூன்று மாதம் இருக்க வேண்டும் என்று தான் அனுப்பினார்கள். ஆனால் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் வீதிகளில் செல்லும் போது மக்கள் என் மீது அளவு கடந்த அன்போடு நடந்து கொண்டார்கள். புதுச்சேரியில் தமிழில் பதவி பிரமாணம் மட்டுமல்ல தமிழில் ஆளுநர் உரையாற்றி இருக்கிறேன். அதுவும் தனக்கு பெருமை தான். 

Tap to resize

Latest Videos

undefined

எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு

புதுச்சேரியை விட்டு செல்வது தனக்கு மன வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் அதைவிட சேவை செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு செல்கிறேன். யார் சொல்லியும் எனது ராஜினாமாவை முடிவு செய்யவில்லை. ராஜினாமா என்பது நானே எடுத்த முடிவு தான். ஆளுநர் மாளிகை என்பது வசதியான மாளிகை. எல்லா சலுகைகளையும் விட்டுவிட்டு வெளியேறுகிறேன். மக்கள் தொடர்பு, மக்கள் சேவை தான் எனது முழு விருப்பம். அதனால் தான் முழு மனதோடு ராஜினாமா செய்தேன்.

நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கிறேன். எல்லாம் நள்ளதாகவே அமையும். அங்கு என்ன முடிவெடுக்கிறார்களோ அதை நான் ஏற்றுக் கொள்வேன். வெற்றிகரமான நிகழ்வாக தான் இருக்கும் என்று நம்புகிறேன். புதுச்சேரிக்கு வருங்காலத்தில் யார் முதல்வராக இருந்தாலும் சரி, வருங்காலத்தில் வரும் ஆளுநராக இருந்தாலும் சரி புதுச்சேரிக்கு எந்த திட்டங்கள் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்குவேன். பெண்கள் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருப்பேன். மணக்குள விநாயகர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன். 

வெள்ளம் பாதித்தபோது வராமல் இப்போது வருவது ஏன்? மோடிக்கு எதிராக சேலத்தில் கருப்பு கொடி போராட்டம்

எதிரிகளை சர்வ சாதாரணமாக தூசி தட்டி விட்டு போவது தான் என்னுடைய பலம். இந்த பலம் தனக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறேன்.  பிரதமர் மோடி மறுபடியும் பிரதமராக வரவேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல். அப்படிப்பட்ட பிரதமர் இருப்பதால் தான் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. வேண்டும் மோடி மீண்டும் மோடி என்பதுதான் தனது தாரக மந்திரம் என்றார்.

click me!