"ஒரு ஊசிப்பட்டாசு கூட வெடிக்க கூடாது" - குடும்பத்தினருக்கு கட்டளையிட்ட அதிமுக தலைகள்

First Published Oct 29, 2016, 8:29 AM IST
Highlights


முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 40 வது நாட்கள் கடந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் உடல் நல பரிபூரணமாக தேறினாலும் அவர் டிஸ்சார்ஜ் ஆகாததால் , முதல்வர் மருத்துவமனையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடினால் தங்கள் பதவிக்கு ஆபத்து வரும் என்பதால்  ஒரு ஊசிப்பட்டாசு கூட வெடிக்க கூடாது என குடும்பத்தினருக்கு கட்டளை இட்டுள்ளார்களாம்.

முதலமைச்சர்  ஜெயலலிதா மீது கட்சிக்காரர்கள் மிகுந்த பற்று வைத்துள்ளனர். முதல்வர் குணமடைய வேண்டும் என்று நாள்தோறும் கோவில் கோவிலாக பூஜைகள் செய்து வருகின்றனர். இது போன்ற தொண்டர்களுக்கு முதலமைச்சர் மீது உள்ள அபிமானத்திற்கு எந்த பின் புலமும் கிடையாது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இருக்காது. 

 ஆனால் கட்சியில் பொறுப்புக்கு வந்தவர்கள் சிலர் காசு பணம் பார்ப்பதும்  , தலைமைக்கு விசுவாசம் இல்லாமல் இருப்பதும் கட்சியில் இருக்கும். கடந்த முறை முதலமைச்சராக ஓபிஎஸ்சும் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றபோது முக்கூர் சுப்ரமணியம் அழுது துவக்கி வைக்க அடுத்து வந்த அனைத்து அமைச்சர்களும் அழுதுகொண்டே பதவி ஏற்க அந்த நிகழ்வு வலைதளங்களில் வெளியாகி நகைப்புள்ளாகியது. 

இந்த நிகழ்வை யாரும் விசுவாசமாக பார்க்கவில்லை, இதே போன்றதொரு நிலையை தான் தற்போது அதிமுக அமைச்சர்கள் முதல் அனைத்து முக்கிய தலைகளும் அனுபவிக்கின்றனர்.  தீபாவளி நேரத்தில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தாங்களோ தங்கள் குடும்பத்தாரோ தீபவளி கொண்டாடினால் அது தங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் ஊசி பட்டாசு கூட வெடிக்க கூடாது என தடை போட்டிருக்கிறார்களாம். 

இதனால் பல தலைகளும் சொந்த ஊருக்கு கூட போகாமல் தேர்தல் பொறுப்பு வேலைக்கு போய்விட்டு சென்னை திரும்பி விட்டார்களாம். இதனால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் எல்லா இடமும் கலையிழந்து காணப்படுகிறது. 

 மேலே சொன்னவைகள் அனைத்தும் எல்லோருக்கும் பொறுந்தாது உண்மையான விசுவாசம் உள்ளவர்களாலும் நிறைந்தது கட்சி என்பதால் தான் 43 ஆண்டுகளாக உயிர்ப்புடன் உள்ளது.   

click me!