படையெடுத்த 6 லட்சம் பேர்…!! ஓபிஎஸ் போராட்டம் வெற்றி என அறிவிப்பு…

First Published Mar 9, 2017, 9:50 AM IST
Highlights
So the mystery of death and that jaya insisted that the inquiry ops organized a protest


ஜெயலலிதா  மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதனால் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி ஓபிஎஸ் அணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அந்த அணியின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும்  எனக்கோரி சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுசேரியில் 36 இடங்களில் ஓபிஎஸ் அணி சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்றனர்? எத்தனை பேர் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறித்து ஓபிஎஸ் அணியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உண்ணணாவிரப் போராட்டம் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் போராட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

அந்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் 20 சதவீதம் பேர் போராட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல் தொழில் நுட்பத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓபிஎஸ்க்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு அளித்துள்ளனர். இது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!