காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாகக் காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகிப்பவர் கேபிகே ஜெயக்குமார். இவர் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில், ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாகக் காணவில்லை என அவரைய மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், “கடந்த 2ம் தேதி இரவு 7.5 மணிக்கு வீட்டில் இருந்து தனது தந்தை ஜெயக்குமார் வெளியில் சென்ற நிலையில் 2 நாட்களாகியும், இன்னும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன தனது தந்தையை கண்டுபித்து தருமாரு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
Savukku Shankar: சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து.. 3 பேர் படுகாயம்?
முன்னதாக கடந்த மாதம் 30ம் தேதி ஜெயக்குமார் தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என நினைத்தோம். ஆனால் தனக்கு கொலை மிரட்டல்விடுவதாகவும், அவர்கள் வீட்டை சுற்றி வருவதாகவும் தெரிவித்து சிலரது பெயர்களை குறிப்பிட்ட மாவட்ட எஸ்.பி.க்கு ஜெக்குமார் புகார் அனுப்பி உள்ளார்.
மாட்டு சாணத்தை பொட்டலம் போட்டு கஞ்சா என விற்பனை; முதலீடே இல்லாமல் லட்சாதிபதியாக நினைத்த இளைஞர்கள்
இந்நிலையில், ஜெயக்குமாரை 2 நாட்களாக காணவில்லை என அவருடைய மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.