கடும் வெயிலால் தண்ணீர் வற்றியதைத் தொடர்ந்து கூந்தன் குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வந்திருந்த வெளிநாட்டு பறவைகள் வழக்கத்திற்கு மாறாக முன்பே சொந்த ஊருக்கு படை எடுக்கத் தொடங்கி உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ காலங்களில் ஏராளமான பறவைகள் வந்து குளத்தில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி, குஞ்சுகள் பொறிப்பது வழக்கம். பொதுமக்களும் பறவைகளை தங்களது குடும்ப உறுப்பினர்களாகவே கருதி அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக கூந்தன் குளத்தில் தண்ணீர் வந்ததால் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கின. இந்தியாவின் வட பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூழைக்கடா, செங்கல் நாரை, வெள்ளைஅரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நீர் காகம், கொக்கு வகைகள், சென்டு வாத்து, நாம கோழி, தலைவாத்து, பூநாரை போன்ற பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன.
தொழிலதிபரின் வீக் பாண்டை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற கும்பல்; நெல்லையில் பரபரப்பு
தற்போது அந்தப் பறவைகள் கட்டி உள்ள கூட்டில் முட்டை இட்டு குஞ்சு பொறித்துள்ளன. குஞ்சுகளுக்கு குளத்திலும், வயல்வெளிகளும் சிறு பூச்சிகள், புழுக்கள் போன்றவை உணவாகக் கொண்டு வந்து கொடுக்கின்றன. இந்த கிராமத்தில் வெளிநாட்டு பறவை குஞ்சுகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கியதையடுத்து குளத்தில் நீர் விறுவிறுவென வற்றி வருவதால் சுமார் 4 மாதம் தங்கி இருந்த பறவைகள் நீரின்றி காணப்படுவதால் முன்கூட்டியே தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.