Breaking: நெல்லையில் மாயமான காங்கிரஸ் தலைவரின் உடல் எரிந்த நிலையில் மீட்பு; காங்கிரஸ் எம்எல்ஏ.வுக்கு தொடர்பு?

By Velmurugan s  |  First Published May 4, 2024, 12:33 PM IST

கடந்த 2ம் தேதி மாயமான திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தன்சிங் உயிரிழந்த நிலையில் மீட்பு. நெல்லையில் பரபரப்பு.


காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தன்சிங். இவர் கடந்த மாதம் 30ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என நினைத்தோம். ஆனால் தனக்கு கொலை மிரட்டல்விடுவதாகவும், அவர்கள் வீட்டை சுற்றி வருவதாகவும் தெரிவித்து சிலரது பெயர்களை குறிப்பிட்ட மாவட்ட எஸ்.பி.யிடம் வழங்குவதற்காக கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். மேலும் அந்த கடிதத்தில் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் பெயரும் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஊழியரை 2 நாட்கள் குடோனில் வைத்து கேஜிஎப் விக்கி செய்த காரியம்! தலைமறைவாக இருந்தவரை தொக்காக தூக்கிய போலீஸ்!

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி இரவு 7.30 மணிக்கு வீட்டில் இருந்து தனது தந்தை ஜெயக்குமார் வெளியில் சென்ற நிலையில் 2 நாட்களாகியும், இன்னும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன தனது தந்தையை கண்டுபித்து தருமாரு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Savukku Shankar: கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் படுகாயம்.. நடந்தது என்ன?

இந்நிலையில் ஜெயக்குமார் தன்சிங்கின் உடல் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டம் ஒன்றில் எரிந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

click me!