செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்..

By manimegalai aFirst Published Jan 18, 2022, 9:35 AM IST
Highlights

செக்ஸ் டாய்ஸ்  உங்கள் பாலியல் வாழ்க்கையை அழிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இது உண்மையா? தெரிந்து கொள்வது அவசியம்.

செக்ஸ் உணர்வு வருவது நம் அனைவரிடமும் தவிர்க்க முடியாதது. ஆனால், அதை ஆரோக்கியமான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. செக்ஸ் டாய்ஸ் வெளிநாடுகளில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியர்களிடம்  முன்பை விட இப்போது, செக்ஸ் டாய்ஸ் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இன்றளவும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதில் தயக்கமும், பதட்டமும் அதிகமாகவே இருக்கிறது.

சிலர் மருந்து கடைகளுக்கு சென்று செக்ஸ் டாய்ஸ் கேட்பதற்கு தயக்கம் கொண்டு, மோசமான மன அழுத்தம் மற்றும் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுகின்றனர். இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு சிலர் செக்ஸ் டாய்ஸ் வாங்கி பயன்படுத்துபவராக இருப்பினும், பிறரிடம் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஏனெனில், நம்முடைய சமூகம் அப்படியானவரை வித்தியாசமாக  பார்ப்பதுடன், பொய் வதந்திகளையும் பரப்பி வருகிறது. இவற்றிற்கு முற்று புள்ளி வைப்பது அவசியமா? என்பதை கீழே தெரிந்து கொள்வோம்.

சமீப காலமாக இந்தியாவில் பாலியல் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலான பதின்ம வயதில் உள்ளவர்கள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.  இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட செக்ஸ் டாய்ஸ் அவசியம்.

செக்ஸ் பிரச்சினை தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சைக்காக வரும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் டாய்ஸ்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு உடலறுவில் பிரச்சினை இருக்கிறது. பலர் சிங்கிளாக உள்ளவர்கள். இது ஆரோக்கியமான ஒன்று தான் என்பதே மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இருப்பினும், செக்ஸ் டாய்ஸ் உங்கள் பாலியல் வாழ்க்கையை அழிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இது உண்மையா? தெரிந்து கொள்வது அவசியம்.

 உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் : 

செக்ஸ் டாய்ஸ் உங்கள் பாலியல் வாழ்க்கையை அழிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. ஆனால், மருத்துவர்களின் கருத்துப்படி, அதிரக்கூடிய செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதால் அவர்களின் உணர்ச்சிகள் அதிகரிக்கின்றன. உச்சகட்ட செக்ஸ் அனுபவத்தை பெறுகின்றனர். அவர்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் செக்ஸ் டாய்ஸை பயன்படுத்தும்போது அவை சரி செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.  

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துபவர்கள் தனிமையை விரும்புபவர்களா?

செக்ஸ் டாய்ஸ் என்பது நம்முடைய பாலியல் உணர்வை அடக்கி வைக்காமல் அதை விருப்பம் போல் வெளிப்படுத்த உதவும் கருவிதான். அது உங்களை தனிமையில் தள்ளி விடும் என்பதெல்லாம் முற்றிலும் பொய்யானவை. செக்ஸ் டாய்ஸை உங்கள் துணையுடன் இணைந்தும் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் செக்ஸ் தருணம் கூடுதல் சுவாரஸ்யமாகும்.

பெண்களுக்கு உதவும் செக்ஸ் டாய்ஸ்: 

பெண்களுக்கு வஜைனாவில் வலியை போக்கவும் உதவுகிறது. இதனால் துணையுடன் இணையும்போது இடையூறுகள் இன்றி செக்ஸ் உணர்வை அனுபவிக்கலாம். அதுமட்மின்றி, பெரும்பாலான பெண்கள் தன் கணவர் தன்னை திருப்தி அடைய செய்யவில்லை என்பதால் பல்வேறு, தவறான பழக்கவழக்த்தில் ஈடுபட்டு பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்ற்னர். இது போன்ற கடினமான சூழ்நிலைகளால் செக்ஸ் டாய்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தும் ஆண்கள்:

 ஆண்கள் கைகளை பயன்படுத்தி சுய இன்பம் அடையும் புணர்ச்சியை விட, இது ஆண்களுக்கு உச்சபட்ச இன்பத்தை அளிக்கிறது. இந்த இன்பத்தை அனுபவிக்க ஆண்கள் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதில் தவறில்லை. இதற்காக அவர்கள் ஓரினச்சேர்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதில் அவசியமும் இல்லை.

இருபாலரும் பயன்படுத்தும்  செக்ஸ் டாய்ஸ்:

உண்மையாக சொல்லப்போனால் அனைத்து செக்ஸ் டாய்ஸ்களையும் அனைத்து பாலினத்தவரும் பயன்படுத்தலாம். அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் சவாலும், இன்பமும் இருக்கிறது. திறந்த மனதுடன் அவற்றை நீங்கள் பயன்படுத்த முற்பட்டால் உங்களுக்கு பல உணர்ச்சிகர மகிழ்ச்சி காத்திருக்கும்.  

எனவே, செக்ஸ் டாய்ஸ் பயன்பாடு நல்லதா? கெட்டதா? என்பதை தாண்டி தங்களது பிரச்சினைகளுக்குரிய நிவாரணமாக செக்ஸ் டாய்ஸ் இருப்பதை பலரும் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.

click me!