Married Women: திருமணமான பெண்கள் ஆன்லைனில் அதிகமாக தேடுவது என்ன..? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்...

By Anu KanFirst Published Jun 15, 2022, 3:59 PM IST
Highlights

Married Women Google Most Search: திருமணமான பெண்கள் தங்கள் கணவரை திருப்திப்படுத்துவது குறித்து கூகுளில் அதிகம் தேடுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.

இன்றைய சூழலில், வீட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது ஓய்வு நேரத்தினை இணையத்தில் அதிகம் செலவிடுகின்றனர்.  அதன்மூலம், சில வேடிக்கையான, விதித்திரமான, சுவாரஸ்யமாக  நிகழ்வுகளும் அவ்வப்போது அரங்கேறி கொண்டு இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றின் தொகுப்புகளை ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களை ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கும்.

இணையத்தில் மூழ்கிய நவீன பெண்கள்:

அவற்றில் குறிப்பாக, திருமணமான பெண்கள் அதிகம் தேடும் விஷயங்கள் பற்றி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, அவற்றுள் பெருவாரியான பெண்கள் சமூக வலைதளங்களில்,  தங்கள் கணவரை பற்றி தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையில் இருக்குதாம். 

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுபவை..?

பெண்கள் தங்கள் கணவரை திருப்திப்படுத்துவது குறித்து  கூகுளில் அதிகம் தேடியிருக்கின்றனர். இதனை தவிர்த்து, தனது கணவருக்கு மிகவும் பிடித்தது என்ன?  கணவரை கையாள்வது எப்படி? என்ற கேள்விகள் உள்ளன. அதுமட்டுமின்றி, குடும்பக் கட்டுப்பாடு எப்போது செய்ய வேண்டும்? குழந்தை பிறக்க சரியான நேரம் எது? போன்ற கேள்விகளையும் திருமணமான பெண்கள் கூகுளில் தேடுகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு இவ்வளவு கேள்விகளா..?

அடுத்தபடியான, திருமணத்திற்கு பிறகு,மாமியார் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். குடும்பப் பொறுப்புகளை எப்படிக் கையாள்வது என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.  குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு வேலையையும், குடும்பத்தையும் எப்படி சமாளிப்பது  என்பது தொடர்பான கேள்விகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற கேள்விகளை புதிதாகத் திருமணமான பெண்கள் அடிக்கடி எழுப்பியுள்ளதாக கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க....Weight Loss Tips: உடல் எடையை மடமடவென குறைக்க உதவும் கிவி...ஒருமுறை ட்ரை பண்ணுக்கோ..? பெஸ்ட் ரிசல்ட் உறுதி..


 

click me!