Porn: ஆன்லைனில் ஆபாச படம் அதிகமாக பார்க்கிறீர்களா..? உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா..?

By Anija KannanFirst Published Jan 26, 2022, 9:20 AM IST
Highlights

ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பவர்களை குறி வைத்து, மர்ம கும்பல் பணம் பறித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பவர்களை குறி வைத்து, மர்ம கும்பல் பணம் பறித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இன்றைய நவீன உலகில் இணையம் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு. அதேபோன்று, இணையம்  இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் இணையம்,  மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. இந்த  இன்றைய இணையத்தின் வளர்ச்சி நம்மில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அபரிமிதமானது. நிறுவனங்களில் வேலை செய்வதில் தொடங்கி, வீட்டில் ஓய்வு எடுப்பது வரை எல்லாவற்றிக்கும் இணையம் இன்றியமையாதது.

’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’என்ற பழமொழி, நீண்ட நேரம் இணையம் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும். வேலை செய்வதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவ்வப்போது  இணையம் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல், தேவைற்ற செயல்களில் இணையம் அதிகப்படியாகப் பயன்படுத்துவது, உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

சமீபத்திய அறிக்கையின்படி, ஆபாச வீடியோக்களைப் பார்க்கும்போது அவர்களின் திரையில் "browser has been locked" என்ற போலியான pop-up notification வருகிறது. இத்தகைய மோசடி குறித்து இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் மக்களை எச்சரிக்கும் விதமாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

இணைய பாதுகாப்பு ஆய்வாளர் இதுகுறித்து கூறுகையில், மக்கள் ஆபாச தளங்களை பார்க்கும் பொழுது அவர்களது திரையில் "browser has been locked" என்ற போலியான pop-up notification வருகிறது. அதனையடுத்து, அதனை unlock செய்ய வேண்டுமெனில் பணம் செலுத்துமாறு அந்த நபரை எச்சரிக்கிறது. மேலும், இது சந்தேகத்திற்கு இடம் அளிக்காத வகையில் அரசாங்கத்தினால் அனுப்பப்படும் செய்தி போல காண்பிக்கிறது.  அதாவது,173-279 சட்டத்தின் கீழ் இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பார்ப்பது மற்றும் பரப்புவது போன்ற மற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக உங்கள் கணினி lock செய்யப்படுகிறது என்று கூறுகிறது. 

அதனையடுத்து lock செய்யப்பட்ட கணினியை மீண்டும் unlock செய்ய அபராதமாக 29,000 ரூபாயை ஆறு மணி நேரத்திற்குள் செலுத்துமாறு கேட்கிறது. அவ்வாறு கேட்கப்பட்ட அபராத தொகையை செலுத்த தவறினால் குற்ற செயலில் ஈடுபட்டதற்காக இந்த வழக்கு அமைச்சகத்திற்கு மாற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது. மேலும், visa அல்லது mastercard மூலம் பணம் செலுத்தும் வசதியையும் காண்பிக்கிறது. 

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இதேபோன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மோசடி ஒன்றில் 3000 ரூபாய் அபராதமாக கேட்கப்பட்டது. ஆபாச படங்கள் பார்ப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், இதுபோன்ற அபராதங்களை அரசாங்கம் விதிப்பதில்லை, அரசாங்கத்தின் பெயரில் போலியாக இதுபோல் மக்களிடம் மோசடி செய்யப்படுகிறது. 

இந்த மோசடியிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது ஆபாசத் தளங்களை பார்ப்பதை கைவிட வேண்டும். அதையும் மீறி நீங்கள் ஆபாச வீடியோக்களை பார்க்கும் பொழுது இதுபோன்ற pop-up notification வந்தால் ctrl+alt+delete மற்றும் End Task என்பதை தேர்வு செய்யலாம்.அதுவும் சரிவரவில்லை என்றால் முழுவதுமாக shut down செய்துவிடலாம் என்றார்.

click me!