அம்மாவும், பொண்ணும் உதட்டுல முத்தம் கொடுத்துக்காதீங்க!: மாடர்ன் மம்மிகளை எச்சரிக்கும் அதிரடி ஆய்வு.

By Vishnu PriyaFirst Published May 4, 2019, 6:12 PM IST
Highlights

பள்ளி, கல்லூரி செல்லும் உங்க பொண்ணுங்களுக்கு உதட்டுல முத்தம் கொடுத்து, அவங்களோட மனதை வீணாக பாழும் கிணற்றுக்குள் தள்ளிடாதீங்க மாடர்ன் அம்மாக்களே!...என்று எக்கச்சக்கமாக எச்சரித்திருக்கிறார் செக்ஸ் ஆலோசகர் அசோக். 
 

பள்ளி, கல்லூரி செல்லும் உங்க பொண்ணுங்களுக்கு உதட்டுல முத்தம் கொடுத்து, அவங்களோட மனதை வீணாக பாழும் கிணற்றுக்குள் தள்ளிடாதீங்க மாடர்ன் அம்மாக்களே!...என்று எக்கச்சக்கமாக எச்சரித்திருக்கிறார் செக்ஸ் ஆலோசகர் அசோக். 

திருமணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆலோசனைகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பாலியல் விஷயங்களுக்கு கவுன்சலிங் கொடுத்து வரும் இவர் சமீபத்தில் அதிர்ச்சிகரமான ஒரு ரிசர்ச் ரிப்போர்ட்டை வெளியிட்டிருக்கிறார். அதில்....

“தமிழகத்தின் பல மாவட்டங்களில் இப்போது பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு இடையில் ‘ஓரின கவர்ச்சி ஈர்ப்பு’ பழக்கம் பெருகி வருகிறது. என் தோழியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது, அதனால அவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்! அப்படின்னு வெளிப்படையா சொல்லிப் பழக துவங்கியிருக்கிறாங்க.


 
இந்த உறவு முறைக்கு ‘சேம் பிஞ்ச்’ அப்படின்னு டைட்டில் வெச்சு அழைச்சுக்கிறாங்க அவங்களுக்குள்ளே. மாணவிகள் மத்தியிலேயே இந்தப் பழக்கம் அதிகமிருக்குதுன்னா...அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களைப் பத்தி யோசிச்சுப் பார்க்கணும். அங்கே இந்த உறவு பத்தி எரியுது. 

திருப்பூர், கோயமுத்தூர், சென்னை மாதிரியான வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பெண்களும் வந்து தங்கி படிக்கிற, வேலை பார்க்கிற ஊர்களில் இந்த சேம் பிஞ்ச் உறவு மிக அதிகமாக இருக்குது. கல்யாணம் பண்ணிக்காமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழுற மாதிரி இந்த சேம் பிஞ்ச் முறையில பெண்ணும், பெண்ணும் சேர்ந்து வாழுறாங்க.


ஒரு ஆணும், பெண்ணும் செக்ஸ் வெச்சுக்கிறப்ப என்ன மாதிரியான சந்தோஷம் கிடைக்குமோ, கிட்டத்தட்ட அதை நெருங்கிய உணர்வை அடையுறதா சொல்லி அவங்களுக்குள்ளேயே திருப்தியடைஞ்சுக்கிறாங்க. பெண் குழந்தையோடு, பெண் குழந்தை பழகுறதை சமுதாயம் தப்பா பார்க்கப்போறதில்லை. அந்த நெருக்கமே இவங்களை பாலியல் தொடர்பு வரை கொண்டு போய் நிறுத்துகிறது. 

அதனால  பள்ளி, கல்லூரியில் படிக்கும் தன் மகள்கள் மீது பெற்றவங்க அதிக கவனம் வைக்கவேண்டியது அவசியம். ஓவரா தோழியை கட்டிக்கிறது, கிஸ் பண்றது, தனிப்பட்ட அங்கங்கள் உரசியபடி நின்று செல்ஃபி எடுக்கிறது மாதிரியான செயல்களை கண்டியுங்கள், அது தொடர்ந்தால் ஆலோசனைக்கு அழைச்சுட்டு போங்க.” என்பவர், கூடுதலாக....

“இப்பல்லாம் பள்ளிக்கு போற குழந்தைகளை சில அம்மாக்கள் அவங்களோட  உதட்டுல முத்தம் கொடுத்து அனுப்புற பழக்கம் பெருகி இருக்குது. இது மிக மிக தவறான ஒரு பழக்கம்.  பெண் குழந்தைங்களோட மனதில் விபரீத எண்ணங்களை உருவாக்கி, அவங்களோட எண்ணங்களை பாழ்படுத்தி, பாழுங்கிணற்றில் தள்ளிவிடும் செயல் இது. இதை தயவு செஞ்சு தவிர்த்திடுங்க. 
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ...உதட்டில் முத்தமிடாதீங்க அம்மாக்களே!” என்கிறார். 
திருந்துவோம்!

click me!