Relationship: உங்கள் துணை செக்ஸில் முழு ஈடுபாடு காட்டவில்லை...அப்படியான...இதுதான் காரணம்? சூப்பர் டிப்ஸ்...

By Anu KanFirst Published Jun 17, 2022, 2:53 PM IST
Highlights

Relationship Tips: உங்கள் துணை படுக்கையில் உங்களிடமிருந்து விலகி இருக்கிறாரா? ஆம் எனில், நீங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துவைத்து கொள்ளலாம். 

தம்பதிகள் திருமணமான புதிதில்,​​​​நெருக்கம், ஆர்வம் மற்றும் காதல் இருக்கும். ஆனால் சில வருடம் சென்றதும் சிலரின் வாழ்வில் மெதுவாக ஏமாற்றம், தனிமை மற்றும் விரக்தி உண்டாகும். இது இருவரின் இல்லற உறவுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால், உங்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் குறைய ஆரம்பிக்கும். இதனால் உங்கள் துணை உங்களை தவிர்க்க ஆரம்பிக்கலாம்.


 
சோர்வாக இருக்கலாம், ஓய்வு அவசியம்:

பெண்கள் பொதுவாக அன்றாட நடவடிக்கைகள், வேலை, வீட்டு வேலைகள், குழந்தைகளை நிர்வகித்தல் போன்றவற்றால் மிகவும் சோர்வாக இருப்பார்கள். உடலுறவு கொள்ள விரும்பத்தக்க மனநிலையும் ஆற்றலும் தேவை. அதற்கான மனநிலையையும், அவர்களுக்கு ஓய்வும் நீங்கள் கொடுக்கும்போது, இவை மாறலாம். இதனால், உங்கள் துணை உங்கள் மீது பிரியமாக இருக்கலாம்.
 
நம்பிக்கை அளிப்பது அவசியம்:

உங்கள் துணை உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல், இருக்கலாம். இது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் உங்களிடம் பேசுவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம். எனவே, நீங்கள் அவரிடம் மனம் விட்டு பேசுங்கள். 

அழுத்தம் தேவையில்லை:

செக்ஸ் வாழ்வில், ஒருவருக்கு ஒருவர் அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவர்களின் அழகை பற்றி இழிவாக கேளி பேச வேண்டாம். இது, உங்களை அவர்களிடத்திலிருந்து மேலும் தள்ளி வைக்கும். எனவே, உடலுறவில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்யுங்கள். மேலும், செக்ஸில் இருவரும் சிற்றின்பத்துடன் இணைந்திருங்கள். 

உடலுறவில் விரைவாக செயல்படாதீர்கள்:

உடலுறவில் விரைவாக செயல்படுவது உங்கள் துணைக்கு சில சமயம் எரிச்சலை ஏற்படுத்தும். நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் பிஸியான அட்டவணையால், அவர்களுக்கு இன்பத்தை உணர நேரமும் இடமும் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் பொறுமையாக விஷயங்களை தொடங்கி, நீண்ட நேரம் செயல்பட நினைக்கலாம். எனவே, அவர்களின் உணர்ச்சிக்கு இடம் கொடுங்கள். அவசரம் தேவை இல்லை.

 மேலும் படிக்க ....Pregnancy: குழந்தையின்மை பிரச்சனைக்கு மருத்துவர்கள் சொல்லும் தீர்வு...எப்போது சிகிக்சை தேவை..? முழு விவரம்...

click me!