அதி தீவிர புயலாக மாறிய ஃபோனி புயல்..! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு..!

By ezhil mozhiFirst Published Apr 30, 2019, 3:26 PM IST
Highlights

தற்போது உருவாகியுள்ள போனி புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது. 
 

அதி தீவிர புயலாக மாறிய ஃபோனி புயல்..!

தற்போது உருவாகியுள்ள போனி புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது. 

இந்த புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சற்று திசைமாறி தீவிர புயலாக வலுப்பெற்ற ஃபோனி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 690 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வரும் 36 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி, வடமேற்கு திசையாக நகர வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒடிசா கடற்கரையை புயல் நெருங்கும் என வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளதால், கடற்படை உட்பட மீட்பு படையினர் புயலின் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இதன் காரணமாக ஒடிசா அரசு புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வேதர்மேன் பிரதீப் ஜான் தெரிவிக்கும் போது, 

சென்னையில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. முதன்முதலாக 40 டிகிரி செல்சியல் வெப்பத்தை தொட்டுள்ளது. இதை விட அதிக வெப்பம் நிலவு வாய்ப்பு உள்ளது. இந்த வாரத்தின் இறுதியில் இன்னும் அதிகமாக இருக்கும். இன்று மற்றும் நாளை சென்னையில் வானம் மேக மூட்டதுடன் காணப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

சென்னை மட்டுமல்லாமல்,வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

click me!