18 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், அவர் ஒரு நாளைக்கு ரூ.7 மட்டுமே முதலீடு செய்தால் போதும். அதாவது மாதம் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும். 20 வருடம் இப்படி முதலீடு செய்தால் 60 வயதுக்கு மேல் 5,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் ஏதாவது ஒரு திட்டத்தைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறது. அத்தகைய ஒரு திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்களது முதுமைக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம்.
அடல் பென்ஷன் யோஜனா மூலம் மக்களுக்கு நிதிப் பாதுகாப்பின் பலனை அரசாங்கம் வழங்குகிறது. உங்கள் வயது 18 முதல் 40 வயது வரை இருந்தால், இந்தத் திட்டத்தில் சேரலாம். 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும்.
அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதுமையில் உறுதியான வருமானத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தில், உங்கள் முதலீட்டைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் பலனைப் பெற, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.
பஜாஜ் சிஎன்ஜி பைக் எப்போ ரிலீஸ் ? பைக் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த பஜாஜ்!
ரூ.5,000 பென்ஷன் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
ஒருவர் 18 வயதில் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்யத் தொடங்கினால், அவர் ஒரு நாளைக்கு ரூ.7 மட்டுமே முதலீடு செய்தால் போதும். அதாவது மாதம் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும். 20 வருடம் இப்படி முதலீடு செய்தால் 60 வயதுக்கு மேல் 5,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். மாதம் 42 ரூபாய் மட்டும் முதலீடு செய்தாலே ரூ.1,000 ஓய்வூதியம் மாதாமாதம் கிடைக்கும்.
இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், கணவன்-மனைவி இருவரும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். இருவரின் முதலீட்டையும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் ஓய்வூதிய பலனைப் பெறலாம். கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றவருக்கு ஓய்வூதிய பலன் கிடைக்கும். இருவரும் இறந்த பிறகு, நாமினிக்கு எல்லாப் பணமும் கிடைக்கும்.
இத்திட்டம் 2015-16ஆம் நிதியாண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, உங்களிடம் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இதனுடன், மொபைல் எண்ணையும் வைத்திருப்பது அவசியம். எந்தவொரு வங்கி அல்லது தபால் நிலையத்திலும் அடல் பென்ஷன் திட்டத்தில் சேரலாம். நாடு முழுவதும் இந்தத் திட்டத்தில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளன்.
இனி ஓட்டை உடைசல் பேருந்துகளே பார்க்க முடியாது! 7000 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டம்!