Female condoms: ஆணுறை தெரியும்..! பெண்ணுறை எப்படி பயன்படுத்துவது..! நல்லது? கெட்டது..? தெரிஞ்சுக்கோங்க....

By Anu KanFirst Published Feb 26, 2022, 2:41 PM IST
Highlights

ஆணுறையை விட பெண்ணுறையில் செக்ஸின் போது அட்வாண்டேஜ் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். 

ஆணுறையை விட பெண்ணுறையில் செக்ஸின் போது அட்வாண்டேஜ் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். 

கரு உருவாவதைத் தடுப்பதற்கு, பலரும் ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், பெண்ணுறைகளும் இருக்கின்றன. இவை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன. பெண்ணுறை அதிகமாக பயன்படுத்தலில் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம். ஆணுறை பற்றி தெரித்த அளவிற்கு பெண்ணுறை பற்றிசில விஷயங்களை பற்றி தெரியாம இருப்பது.

பெண்ணுறை என்பது ஒரு நீண்ட பிளாஸ்டிக் பை ஆகும், இது பொதுவாக நைட்ரைல், லேடக்ஸ் இல்லாத ரப்பரால் ஆனது. இது உடலுறவின் போது பெண்ணுறுப்பின் உள்ளே செல்கிறது. இந்த உறையின் இரு முனைகளிலும் உள்ள நெகிழ்வான வளையங்கள் அதை ஒரே இடத்தில் வைத்திருக்கின்றன. ஆணுறை பெண்ணுறுப்பின் சுவர்களை நலிந்துபோகச் செய்கிறது மற்றும் விந்து மற்றும் பிற திரவங்களை சேகரிக்கிறது. அதுவே பெண்ணுறையை உபயோகிக்கும் விதம், ஒரு டேம்பானை உபயோகிப்பது போன்றது. இது முதலில் கொஞ்சம் குழப்பமானதாகத் தோன்றலாம், ஆனால் முயற்சி திருவினையாக்கும். 

பெண்ணுறையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்?

1. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் புதிய உறையைப் பயன்படுத்தவும்.

2. இந்த உறை ஒரு குழாய் போன்று இருக்கும், அதன் இரு முனைகளில் இரு வளையங்கள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் கப், டாம்பூன் போன்றவற்றை யோனிக்குள் பொருத்துவது போன்றுதான் இந்த உறையையும் உள்செலுத்த வேண்டும். 

3. இந்த பெண்ணுறையை உடலுறவுக்கு எட்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே யோனிக்குள் உட்செலுத்த வேண்டும். உடலுறவுக்குப் பின் உடனே எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். உள் வளையத்தை உள்நுழைத்து கர்ப்பப்பை வாயின் வரை கொண்டு போக வேண்டும்.

4.  வெளி வளையம் யோனியின் முகப்பின் அருகே இருக்கும். இப்போது விந்து இந்த பையினுள் அடைந்து விடும். பயன்பாட்டின்பின், வெளி வளையத்தை நன்றாக சுற்றி ஒரு முடிச்சு போல் ஆக்கிவிட்டு இந்த பையை மெதுவாக வெளியே இழுக்க வேண்டும். 

5. ஆண் உறையைப் போல குறி விறைப்பாகுவதற்கு பெண்கள் காத்திருக்க தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த உறையை உள்செலுத்திக் கொள்ளலாம்.

6. இவை பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது. லேடக்ஸ் அல்லாத மெட்டீரியலில் தயாரிக்கப்படுவது என்பதால் தோல் எரிச்சலைத் தவிர்க்கமுடியும். பார்ட்னர் பிறப்புறுப்பு விரைப்புத் தன்மை குறைந்தாலும் பெண்ணுறை அப்படியே இருக்கும். 

7. பெண்ணுறைகள் சரியாகப் பயன்படுத்தும் வரை அவை ஆணுறைகளைப் போலவே வேலை செய்யும். அவை சுமார் 95 சதவிகிதச் செயல்திறன் கொண்டவை, அதாவது ஒரு வருடத்தில், ஒவ்வொரு முறையும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் 100 பெண்களில் 95 பேர் கருவுறுவதைத் தவிர்க்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.

8. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதுவகையான காண்டம்களில் இயற்கையான லாடெக்ஸ் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது எந்தவித உராய்வு சத்தத்தை உண்டாக்குவதில்லை எனவும் கூறப்படுகிறது. அதோடு பெண்களின் யோனியில் ஃபிடாகவும் இருக்கிறது. வாட்டர் அல்லது சிலிகான் தன்மையிலான வழுவழுப்பு பெண்களுக்கு பாதுகாப்பானது. 

click me!