After sex: செக்ஸில் உச்சக்கட்டம் அடைந்த பின் இதை செய்ய மறக்காதீங்க...சுகாதாரம் ரொம்ப முக்கியம் பாஸ்!

By manimegalai aFirst Published Jan 21, 2022, 10:21 AM IST
Highlights

செக்ஸ் என்று வரும்போது, மகிழ்ச்சிக்கு இடையில், மக்கள் பெரும்பாலும் சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க மறந்து விடுகிறார்கள்.

செக்ஸ் என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும்  இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். கரோனா காலகட்டத்தில் காலை நேரத்தில் உடலுறவு கொள்வது, உடலை புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும். அப்படியான, பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. இப்படியான மனபாதுகாப்பின்மைக்கு ஒருவகை காரணமாக சுகாதாரமும் அமைந்துள்ளது. 

தாம்பத்தில் ஈடுபடும் தம்பதியினர் சுய சுகாதாரம் இருப்பது மிகவும் அவசியம். உறவு வைத்துக்கொள்வதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு சோப் போட்டு கழுவ வேண்டும். அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரத்தையும் பேண வேண்டும்.

செக்ஸ் என்று வரும்போது, மகிழ்ச்சிக்கு இடையில், மக்கள் பெரும்பாலும் சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க மறந்து விடுகிறார்கள். உடலுறவுக்கு முன் கடைபிடிக்கும் சுகாதாரத்தைப் போலவே செக்ஸ்க்கு பிறகான சுகாதாரமும் முக்கியமானது. மேலும் பிற நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களை காக்கவும் சுகாதார நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது. செக்ஸ்க்கு பிறகான சுகாதாரத்தை எப்படி பின்பற்ற வேண்டும் என்று பின்வரும் சில வழிகள் மூலம் தெரிந்துகொள்வோம்.

ஆணுறையை பாதுகாப்பான டிஸ்போஸ்:

நீங்கள் ஒரு ஆணுறையை பயன்படுத்தியிருந்தால், அதை பத்திரமாக டிஸ்போஸ் செய்வது முக்கியம். பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை சீல் வைக்கப்பட்ட பேக்கில் தூக்கியிரியுங்கள். ஒருமுறை ஒரு செக்ஸ் பொருளை பயன்படுத்தினால் அதை நன்றாக கழுவுங்கள் அல்லது பத்திரமாக தூக்கி எறியுங்கள். அதை பத்திரமாக டிஸ்போஸ் செய்யவில்லை என்றால் அது சுற்றத்திற்கும் கேடுதான்.

பிறப்புறுப்பு: 

உடலுறவில் ஈடுபட்ட பிறகு பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்புகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் சோப்பில் pH அளவு அதிகமாக இருந்தால் யோனியில் எரிச்சல் ஏற்படக்கூடும். அதனால் வாசனை திரவிய தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கழுவிய பின், உங்கள் பிறப்புறுப்பு பகுதியை உலர்த்தி, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணியுங்கள். நீங்கள் சுத்தம் செய்யும்போதோ துடைக்கும்போதோ எப்போதும் சுத்தமான துணியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லையென்றால் இது ஆசனவாயிலிருந்து வரும் நுண்ணுயிரிகள் சிறுநீர்க்குழாய் சென்று தொற்றுநோயை ஏற்படுத்தும்.

சிறுநீர்: 

உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. உடலுறவின் போது சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்த எந்த பாக்டீரியாவையும் சிறுநீர் கழிக்கும் போது வெளியேற்றலாம். உடனே சிறுநீர் கழிக்க போகாமல் இருப்பினும் கூட, சிறுநீர் வரும் போது அதை அடக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். 

தொற்று பாதிப்பு இருப்பவர்கள்: 

பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் உங்களிடம் கூறினால், நீங்கள் சில காலத்திற்கு உடலுறவில் ஈடுபடுவதையே தவிர்க்க வேண்டும். காண்டத்தை பயன்படுத்தினால் கூட தொடுதல், முத்தமிடுதல் மூலம் நோய் பரவும் என்பதால் உடலுறவை தவிர்ப்பதே நல்லது.
 
செக்ஸ் பொம்மைகள் அல்லது கருவிகள்:

நீங்களும் உங்கள் பார்ட்னரும் செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தினால், உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களின்படி அவற்றை சரியாகக் கழுவுங்கள். செக்ஸ் பொம்மைகளை முழுமையாக நீர்ப்புகாமால் வைத்திருக்க வேண்டும். கழுவப்படாத செக்ஸ் பொம்மைகளில் கண்டிப்பாக பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் இருக்கும். இவை அனைத்தும் தொற்றுநோயை ஏற்படுத்தும். மேலும், பாலியல் பொம்மைகளை பார்ட்னர்களிடையே சுத்தம் செய்யாவிட்டால் அவற்றைப் பகிரக்கூடாது.

இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்: 

கரோனா நேரத்தில் தினமும் வேலைக்கு வெளியில் செல்பவர்கள், மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.அதேபோன்று,  சர்க்கரைநோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைவாக்கும் பிரச்சனைகள் இருக்கும்பட்சத்தில் வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது தான் நல்லது.  

எனவே,  மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமான உடலுறவை மேற்கொள்ள வாழ்த்துக்கள்!
 

click me!