Sex secret 7: காற்று மாசுபாட்டால் விந்தணுக்களுக்கு வந்த சோதனை..? ஆண்களை கலங்கடிக்கும் ஆய்வு முடிவு..!

By Anu KanFirst Published Feb 24, 2022, 2:08 PM IST
Highlights

இன்றைய கால கட்டத்தில் உலக நாடுகளில் பலவற்றில், ஆண்கள் பலருக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு உள்ள நிலையில், காரணம் தெரிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

இன்றைய கால கட்டத்தில் உலக நாடுகளில் பலவற்றில், ஆண்கள் பலருக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு உள்ள நிலையில், காரணம் தெரிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் சீன ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், அதிக மாசு உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது. 

அதாவது, காற்று மாசுபாடு விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 33,876 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், காற்று மாசுபாடு ஆண்களின் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குகிறது. 30,000-க்கும் மேற்பட்ட ஆண்களிடமிருந்து விந்து தர தரவுகளைப் பயன்படுத்துவதால், காற்று மாசுபாட்டிற்கும் விந்து தரத்திற்கும் இடையே உள்ள தொடர்பு உண்மையானது என்று ஆய்வாளர்கள் கூறினார்.

 

மேலும், அமெரிக்காவில் முன்னதாக நடத்தப்பட்ட ஆய்விலும்,  வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் வாழும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 1970 களில் இருந்து குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், காற்று மாசுபாடும் ஒரு முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஜமா நெவொர்க் ஓபன் என்ற இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், சீனாவில் 130 இடங்களில் ஆண்களின் ஆரோக்கிய நிலை குறித்த தகவல்களை சேகரித்துள்ளது. சுமார் 34,000 ஆண்கள் ஆயுவுக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவர்கள் அவர்களின் விந்தணு எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அடர்த்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். ஆய்வில் பங்கேற்ற்றவர்கள், அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள காற்று மாசுபாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

மன அழுத்தம் அதிகம் உள்ள சூழ்நிலைகளில், மூளை என்பது பாலின உறுப்புகளுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ள நிலையில், கருவுறுதல் மற்றும் விந்தணு எண்ணிக்கையை மாசுபாடு பாதிக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாடு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  மூளையின் மீதான இந்த தாக்கம் விந்தணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  

விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான டிப்ஸ்:

பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் வராமல் இருக்க பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள்.

புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதை தவிர்க்கவும். உடல் பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

விந்தணு எண்ணிக்கை: இது விந்து வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

விந்தணு இயக்கம்: இது பெண்ணின் கருப்பை வாய், கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் வழியாக செல்லவும் மற்றும் கருவுற முட்டையை அடையவும் விந்தணுவின் திறன் ஆகும். விந்தணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது கருவுறுதலைக் குறைக்கும்.

விந்தணு அமைப்பு: விந்தணு உருவவியல் என்றும் அழைக்கப்படுகிறது. இது விந்தணுவின் சரியான அமைப்பை உள்ளடக்கியது. இது இயக்கத்திற்கு உதவும். ஒரு சிறந்த அமைப்பு சிறந்த விந்தணு தரத்தை குறிக்கிறது.

மேலும் படிக்க...Sex secret 6: செக்ஸின் உச்சக்கட்டத்தில் பெண்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம்? ஆண்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

 

click me!