இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 25.05.2023

By Dinesh TGFirst Published May 25, 2023, 7:52 AM IST
Highlights

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 25.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன் - கார் நேருக்கு நேர் மோதல்.. கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

பள்ளி வேன் - கார் மோதல்..

நாடாளுமன்ற திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற திறப்பு விழா

1947ஆம் ஆண்டு நேருவிடம் அளிக்கப்பட்ட அதே செங்கோல் பிரதமரால் மக்களவையில் சபாநாயகர் மேடைக்கு அருகில் நிறுவப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

தமிழர்களின் செங்கோல்

இந்திய அளவில் மிகப்பெரிய பொருளியல் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று சிங்கப்பூரின் உள்துறை சட்ட அமைச்சர் சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிங்கப்பூர் அமைச்சர் புகழாரம்

ராஜஸ்தான் மாநில தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.3,500 கோடி மதிப்பிலான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அதில் முதல்வர் அசோக் கெலாட் உள்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் பாஜக கூறுகிறது.

ராஜஸ்தானில் ரூ.3,500 கோடி ஊழல்

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

மோடியின் ஆஸ்திரேலிய பயணம்

5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யு.டி. காதர் கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகத் ஒருமனதாகத் தேர்வாகியுள்ளார்.

யு.டி. காதர்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

திருமாவளவன் குற்றச்சாட்டு

2023ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜிடிபி

சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் அவமதிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத்தலைவரை அவமதிப்பதா? எல்லாம் நான்தான் என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு? இது எதிர்க்கட்சிகளின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வெங்கடேசன் எம்.பி கண்டனம்
 

click me!