ஆஸ்திரேலிய பயணத்தில் என்ன நடந்தது? பிரதமர் மோடி பகிர்ந்த ஹைலைட்ஸ் வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ஆஸ்திரேலிய பயணம் முக்கியமானது என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார். ஜப்பானில் தொடங்கிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இறுதியாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
புதன்கிழமை சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்த பிரதமர் மோடி பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து விவாதித்தார். இந்தச் சந்திப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
“பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடனான ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் முதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டடத்தில் பங்கேற்றது வரை, தொழிலதிபர்களுடன் சந்திப்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல ஆஸ்திரேலியர்களுடன் உரையாடல், எற இது ஒரு முக்கியமான பயணமாக அமைந்தது. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நட்புறவை அதிகரிக்கும்" என்று தன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி.. மூவர்ண கொடியால் ஜொலிக்கும் சிட்னி துறைமுகம், ஒபேரா ஹவுஸ்
ஆஸ்திரேலியப் பிரதமர் ட்விட்டரில் தானும் பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், :சிட்னி மக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்காக திரண்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சிட்டியில் பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், பிரதமர் மோடியை "பாஸ்" என்று அழைத்தார். பிரதமர் மோடியை புகழ்பெற்ற ராக்ஸ்டார் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுடன் ஒப்பிட்டார்.
"இந்த மேடையில் நான் கடைசியாக ஒருவரைப் பார்த்தது புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை, பிரதமர் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பிரதமர் மோடிதான் பாஸ்" என்று ஆன்டனி அல்பானீஸ் கூறினார்.
கடந்த ஆண்டு, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (ECTA) இறுதி செய்து, கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்தது. இரு தரப்பும் இப்போது விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (CECA) செயல்பட்டு வருகின்றன.
கொரோனாவை விட கொடிய நோய்க்கு உலகம் தயாராக வேண்டும்.. WHO தலைவர் எச்சரிக்கை..