இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.. செங்கோலை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பெருமிதம்.!

By vinoth kumarFirst Published May 25, 2023, 7:39 AM IST
Highlights

டெல்லியில் 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வரும் 28ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் தங்களது குடும்பத்தினர் தயாரித்த செங்கோல் இடம்பெறுவது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என உம்மிடி குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வரும் 28ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். ஆகஸ்ட் 14, 1947ம் ஆண்டு இரவு இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் நடந்த சிறப்பு நிகழ்வு அது. அன்று இரவு ஜவஹர்லால் நேரு அவர்கள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து செங்கோலைப் பெற்றுக்கொண்டார். 

இதையும் படிங்க;- புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் தமிழர்களின் செங்கோல் வரலாறு!

சோழர் கால மாதிரி செங்கோல் தயாரிக்கும் பணியை சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடை மேற்கொண்டது. 5 அடி உயரம் கொண்ட செங்கோலின் மேல் பகுதியில் நீதியின் அடையாளமாக திகழும் நந்தி சிலை இடம்பெற்றது. ஆங்கிலேயர்களால் இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட தருணம் அது. நாம் சுதந்திரம் என்று கொண்டாடுவது உண்மையில் 'செங்கோலை' ஏற்ற அந்த  தருணத்தைத்தான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். 

இந்நிலையில், செங்கோலை தயாரிக்கும் வம்சாவளியை சேர்ந்த ஜிதேந்தர் உம்மிடி பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்;- இந்த செங்கோல் எங்கள் குடும்பத்தின் சொத்து. என்னுடைய தாத்தாவின் உழைப்பு இன்று எங்களுக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளது. இந்த செங்கோலின் பெருமையை கேள்விப்பட்டு, புதிய நாடாளுமன்றத்தில் இது இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது எங்களின் குடும்பத்திற்கு மிகப்பெரிய பாக்கியம் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  பிரதமர் மோடியின் கைகளில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் செங்கோல்.. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ட்விஸ்ட்

மேகூம், இந்த செங்கோலின் அசல், அலகாபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தில் உள்ளது. இதனையடுத்து, அசல் செங்கோலின் அளவுகளை கணக்கிட்டு, அதேபோன்ற மாதிரியை உருவாக்கியுள்ளோம் என்றார். 

click me!