கர்நாடக சட்டப்பேரவையின் முதல் இஸ்லாமிய சபாநாயகராக தேர்வானார் யு.டி. காதர்

By SG BalanFirst Published May 24, 2023, 8:43 PM IST
Highlights

5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யு.டி. காதர் கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகத் ஒருமனதாகத் தேர்வாகியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வாகியுள்ளார் காங்கிரஸ் எம்எல்ஏ யு.டி.காதர். இவர் அந்த மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராகத் தேர்வாகியுள்ள முதல் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றார்கள்.

கர்நாடகாவில் ஹிஜாப் தடையை காங்கிரஸ் அரசு நீக்குமா? அமைச்சர் பரமேஸ்வரா சொன்ன பதில் இதுதான்..

இந்நிலையில், புதிய சட்டப்பேரவையின் சபாநாயகராக யு.டி. காதர் தேர்வாகியுள்ளார். செவ்வாய்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள காதர் இன்று கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார்.

முதல்வர் சித்தராமையா யு.டி.காதரை சபாநாயகராக முன்மொழிய, துணை முதல்வர் சிவகுமார் அதனை வழிமொழிந்தார். இடைக்கால சபாநாயகர் ஆர்.வி. தேஷ்பாண்டே யு.டி.காதருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 54 வயதாகும் காதர், கர்நாடக சட்டப்பேரவையில் இரண்டாவது இளம் சபாநாயகர் ஆவார். இதற்கு முன் தேவகவுடா முதல்வராக இருந்தபோது 43 வயதான ரமேஷ் குமார் சபாநாயகராக இருந்தார்.

தரையைத் தொட்டவுடன் மீண்டும் வானில் பறந்த இண்டிகோ விமானம்! கதி கலங்கிய பயணிகள்!

2007ஆம் ஆண்டு கர்நாடகாவின் உல்லால் சட்டப்பேரவை உறுப்பினராக யு.டி. காதர் முதல் முதலாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். தந்தை யு.டி. ஃபரீத் மறைவுக்குப் பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின், அந்தத் தொகுதி மங்களூரு தொகுதியாக மாறியது.

பின் அடுத்தடுத்து நடைபெற்ற 4 தேர்தல்களில் மங்களூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளார். 2013 முதல் 2018 வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். 2018-19ல் ஜேடிஎஸ் உடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த பாஜக ஆட்சியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும் யு.டி. காதர் செயல்பட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் தமிழர்களின் செங்கோல் வரலாறு!

click me!