புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் தமிழர்களின் செங்கோல் வரலாறு!

By SG Balan  |  First Published May 24, 2023, 5:12 PM IST

1947ஆம் ஆண்டு நேருவிடம் அளிக்கப்பட்ட அதே செங்கோல் பிரதமரால் மக்களவையில் சபாநாயகர் மேடைக்கு அருகில் நிறுவப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.


வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்ற கட்டிடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. அப்போது பிரதமர் மோடி நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாகத்தின் சின்னமான செங்கோலைப் பெற்று, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவுவார். ஆகஸ்ட் 14 அன்று இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்தச் செங்கோலைப் பெற்றுக்கொண்டுதான் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா சுதந்திரம் பெற்றதை அறிவித்தார்.

புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியா சுதந்திரம் பெற்றபோது நடந்த இந்த நிகழ்வை உள்துறை அமைச்சர் அமித் ஷா நினைவுகூர்ந்துள்ளார். “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவின் அதிகாரத்தை பரிமாற்றம் செய்யும் வகையில் பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோலை ஒப்படைத்த நிகழ்வைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது" என்று அமித் ஷா கூறினார்.

Tap to resize

Latest Videos

"ஆகஸ்ட் 14, 1947 அன்று இரவு இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் நடந்த சிறப்பு நிகழ்வு அது. அன்று இரவு ஜவஹர்லால் நேரு அவர்கள் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து செங்கோலைப் பெற்றுக்கொண்டார். ஆங்கிலேயர்களால் இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட தருணம் அது. நாம் சுதந்திரம் என்று கொண்டாடுவது உண்மையில் 'செங்கோலை' ஏற்ற அந்தத் தருணத்தைத்தான்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா விவரித்தார்.

தரையைத் தொட்டவுடன் மீண்டும் வானில் பறந்த இண்டிகோ விமானம்! கதி கலங்கிய பயணிகள்!

மாண்புமிகு பிரதமர் செங்கோலை அமிர்த காலத்தின் தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுத்தார். நாராளுமன்றத்தின் புதிய கட்டிடம் அந்த நிகழ்வுக்குச் சாட்சியாக இருக்கும். ஆதீனம் விழாவை மீண்டும் நிகழ்த்தி மாண்புமிகு பிரதமருக்கு செங்கோலை வழங்குவார்.

உள்துறை அமைச்சர் செங்கோலைப் பற்றி மேலும் விரிவாகக் கூறியுள்ளார். "செங்கோல் ஆழமான பொருள் கொண்டது. இது 'செம்மை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'நீதி'. இது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முன்னணி மடத்தின் தலைமைக் குருக்களால் ஆசீர்வதிக்கப்படுகிறது. நந்தி, நீதியின் பார்வையாளனாக அதன் அசையாத பார்வையுடன், உச்சியில் செதுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, செங்கோல் பெறுபவர் நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதை ஒருபோதும் மறக்கக்கூடாது" என்று அமித் ஷா சொன்னார்.

1947ஆம் ஆண்டு நேருவிடம் அளிக்கப்பட்ட அதே செங்கோல் பிரதமரால் மக்களவையில் சபாநாயகர் மேடைக்கு அருகில் நிறுவப்படும். இது சிறப்பு சந்தர்ப்பங்களில் தேசத்தின் பார்வைக்கும் வைக்கப்படும். இந்த வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை நிறுவ நாராளுமன்றம்தான் மிகவும் பொருத்தமான, புனிதமான இடம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கேரளாவைக் கலக்கும் விஷ்ணு பம்பர் லாட்டரி! 12 கோடி பரிசு பெற்றது யார் தெரியுமா?

"செங்கோல் நிறுவப்பட்டது, ஆகஸ்ட் 15, 1947 இன் உணர்வை மறக்க முடியாததாக ஆக்குகிறது. இது எல்லையற்ற நம்பிக்கை, எல்லையற்ற சாத்தியக்கூறுகள் மற்றும் வலுவான, வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாட்டின் சின்னமாகும். இது அமிர்த காலத்தின் அடையாளமாக இருக்கும். இது இந்தியா தனது சரியான இடத்தைப் பிடிக்கும் புகழ்மிகு சகாப்தத்திற்கு சாட்சியாக இருக்கும்." என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும், "2021-22 ஆம் ஆண்டின் இந்து சமய அறநிலையத் துறை கொள்கைக் குறிப்பில், மாநிலத்தின் மடங்கள் வகிக்கும் பங்கை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அது அரச ஆலோசகராக மடங்கள் ஆற்றிய பங்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், ஆதீனத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டது.

20 ஆதீனத் தலைவர்களும் இந்த புனிதமான நிகழ்வில் கலந்துகொண்டு, இந்த புனித சடங்கை நினைவுகூரும் வகையில் தங்கள் ஆசிகளைப் வழங்குவார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 96 வயதான ஸ்ரீ உம்மிடி பங்காரு செட்டியும் இந்த புனித விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

ஆசியாவின் 200 கோடி மக்கள் நீர், எரிசக்தி இன்றி பாதிக்கப்படுவர்; ஆபத்து பட்டியலில் இந்தியா!!

செங்கோல் பற்றிய விவரங்கள் அடங்கிய sengol1947.ignca.gov.in என்ற சிறப்பு இணையதளம் உள்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பேசிய அமித் ஷா, “இந்திய மக்கள் இதைப் பார்த்து இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்” என்றார்.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சீனாவின் பிடியில் உள்ள தெப்சாங், டெம்சோக்கில் ரோந்து உரிமையை மீட்டெடுப்பதில் இந்தியா உறுதி

click me!