இந்த ஆண்டு விஷூ பம்பர் 2023ல் பெரும்பாலான 300 ரூபாய் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. முதல் பரிசு ரூ.12 கோடி. இரண்டாம் பரிசாக ஆறு பேருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும். மூன்றாவது பரிசாக தலா ஆறு பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
கேரள மாநில லாட்டரித் துறை விஷு பம்பர் பிஆர்-91 லாட்டரியின் முடிவுகளை அறிவித்துள்ளது. விஷு பம்பர் 2023 குலுக்கல் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. விஷு பம்பர் 2023 என்பது மாநில லாட்டரி துறையின் 91வது பம்பர் பரிசுக் குலுக்கல் ஆகும்.
இந்த ஆண்டு சுமார் 42 லட்சம் விஷூ பம்பர் 2023 டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலான 300 ரூபாய் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷு பம்பர் 2023 ஆனது VA, VB, VC, VD, VE மற்றும் VG ஆகிய ஆறு சீரீஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விஷூ பம்பர் 2023ல் முதல் பரிசு ரூ.12 கோடி. இரண்டாம் பரிசாக ஆறு பேருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும். மூன்றாவது பரிசாக தலா ஆறு பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
விசு பம்பர் 2023 இன் முடிவை, கேரளா லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.keralalotteries.com -ல் உடனுக்குடன் பார்க்க முடியும். சீட்டு வைத்திருப்பவர்கள் 30 நாட்களுக்குள் வெற்றி பெற்ற சீட்டை லாட்டரித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன் கேரள அரசின் அரசிதழில் முடிவைச் சரிபார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, கன்னியாகுமரி அருகே மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ரமேசன் மற்றும் மருத்துவர் பிரதீப் இருவரும் விஷூ பம்பர் வென்றனர். கடந்த ஆண்டு முதல் பரிசாக ரூ.10 கோடி கிடைத்தது. வரிக்குப் பின் அவர்களுக்கு ரூ.6.16 கோடி கிடைத்தது.
லாட்டரி பரிசு ரூ. 5000க்கு குறைவாக இருந்தால், அந்தத் தொகையை மாநிலத்தில் உள்ள எந்த லாட்டரி கடையிலிருந்தும் பெறலாம். 5000 ரூபாய்க்கு மேல் இருந்தால், டிக்கெட் மற்றும் அடையாளச் சான்றினை அரசு லாட்டரி அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விஷு பம்பர் 2023க்குப் பிறகு, அடுத்த கேரளா பம்பர் லாட்டரி 2023 மான்சூன் பம்பர் ஆகும். பொதுவாக, கேரளாவில் ஓணம், விஷு, கிறிஸ்துமஸ் போன்ற நாட்களின்போது பம்பர் லாட்டரி சீட்டுகள் வழங்கப்படும்.
லாட்டரி பரிசுகளின் விரிவான முடிவு பின்வருமாறு:
முதல் பரிசு: ரூ.12 கோடி
வெற்றிபெறும் டிக்கெட் எண்: VE 475588
2வது பரிசு: ரூ 1 கோடி (ஆறு டிக்கெட்டுகளுக்கு)
வெற்றிபெறும் டிக்கெட் எண்கள்: VA 513003, VB 678985, VC 743934, VD 175757, VE 797565, VG 642218
3வது பரிசு: ரூ 10 லட்சம் (ஆறு டிக்கெட்டுகளுக்கு)
வெற்றிபெறும் டிக்கெட் எண்கள்: VA 214064, VB 770679, VC 584088, VD 265117, VE 244099, VG 412997
ஆறுதல் பரிசு: ரூ. 1 லட்சம்
வெற்றிபெறும் டிக்கெட் எண்கள்: VA 475588, VB 475588, VC 475588, VD 475588, VG 475588
4வது பரிசு: ரூ 5 லட்சம்
வெற்றிபெறும் டிக்கெட் எண்கள்: VA 714724, VB 570166, VC 271986, VD 533093, VE 453921, VG 572542
5வது பரிசு: ரூ 2 லட்சம்
வெற்றிபெறும் டிக்கெட் எண்கள்: VA 359107, VB 125025, VC 704607, VD 261086, VE 262870, VG 262310
6வது பரிசு: ரூ 5000
இதனுடன் முடிவடையும் டிக்கெட்டுகள்: 0176 0250 0474 1239 1292 1706 1725 1758 1882 2862 2961 4538 4594 4850 5012 5100 5345 7345 54460 54426 6636 6764 6918 6941 7235 7762 8234 8652 9239 9309 9427 9448 9879
7வது பரிசு: ரூ 2000
டிக்கெட் முடிவு: 1029 1490 1997 2333 2402 2627 3030 3152 3365 3377 3761 4267 4342 5226 5297 5898 6026 334756 9005
8வது பரிசு: ரூ 1000
டிக்கெட் முடிவு: 0057 0429 0525 0777 0862 1498 1574 1893 1994 2055 2092 2121 2206 2461 2490 2602 274339 4648 3673 4522 4667 4872 5866 5964 6072 6141 6652 6699 6829 7036 7122 7171 7172 7386 7538 7552 7849 7849 7876 81 86 8899 9132 9601 9743 9946 9948