சீனாவின் பிடியில் உள்ள தெப்சாங், டெம்சோக்கில் ரோந்து உரிமையை மீட்டெடுப்பதில் இந்தியா உறுதி

By SG BalanFirst Published May 24, 2023, 2:56 PM IST
Highlights

கிழக்கு லடாக்கின் பகுதியில் உள்ள தெப்சாங் மற்றும் டெம்சோக்கில் ஏப்ரல் 2020 க்கு முந்தைய நிலையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

கிழக்கு லடாக்கின் பகுதியில் உள்ள தெப்சாங் மற்றும் டெம்சோக்கில் ஆகிய பகுதிகளில் ரோந்து உரிமைகளை மீட்டெடுப்பதில் உறுதியான கொள்கையுடன் இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெப்சாங் சமவெளியில் இந்திய எல்லைப் பகுதிக்குள் 15-20 கிமீ தொலைவில் உள்ள மண்டலத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் ரோந்து உரிமையைக் கைபற்றியுள்ளது. இதனை மீட்டெடுக்க பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் 2020 க்கு முந்தைய நிலையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் கிடைத்துள்ளது.

துருப்புக்களை வெளியேற்றுவது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவம், அதிகாரிகள் மட்டத்தில் பல நிலைகளில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாரம்பரியமான ரோந்துப் மையங்களில் ரோந்து உரிமைகளை மீட்டெடுக்கும் முன்னெடுப்பாக இந்த நடவடிக்கை தொடர்கிறது.

பிரதமர் மோடியின் கைகளில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் செங்கோல்.. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ட்விஸ்ட்

18வது சுற்று பேச்சுவார்த்தை

ஏப்ரல் 23 அன்று, இரு நாடுகளின் ராணுவங்களும் சீனாவின் சுஷுல்-மோல்டோ சந்திப்பு பகுதியில் கூடி தெப்சாங் மற்றும் டெம்சோக் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துள்ளன. அது மூத்த உயர் இராணுவத் தளபதி மட்டத்தில் (SHMCL) நடந்த 18வது சுற்று பேச்சுவார்த்தை ஆகும்.

இதுவரை, கோக்ரா, கால்வான், பான்காங் ஆகிய பகுதிகளில் இருந்து சீன துருப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால், இதனால் நடப்பு கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) சீரமைப்பு மீதான இந்தியாவின் உரிமைகோரலில் மாற்றம் இருக்காது என சொல்லப்படுகிறது.

"இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில் எல்லாம் பரஸ்பர மற்றும் சமமான பாதுகாப்பின் அடிப்படையில் துருப்புகள் திரும்பப் பெற்றப்பட்டுள்ளன. ஆனால், இரு தரப்பிலும் நடப்பு கட்டுப்பாட்டுக் கோட்டின் உரிமைகோரலில் எந்த மாறுதலும் இல்லை" என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழங்குடியினரின் கலையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடி!!

தெப்சாங்

இரு தரப்புக்கும் முக்கியமானதாகக் கருதப்படும் தெப்சாங்கில், PPs 10, 11, 11A, 12, மற்றும் 13 ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் வழியை சீனத் துருப்புக்கள் அடைத்து வைத்துள்ளன. தெப்சாங்கிற்கு கிழக்கே அக்சாய் சின் பகுதியும், வடமேற்கில் சியாச்சின் பனிப்பாறையும் உள்ளதால் இப்பகுதியின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.

1962ஆம் ஆண்டு முதல் 38,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருகிறது. இந்த பகுதி அப்போதிருந்தே ஒரு சர்ச்சைக்குரிய இடமாக இருந்தது. ஒய்-ஜங்ஷன் என்றும் அழைக்கப்படும் தெப்சாங் சமவெளியில் சீன துருப்புகள் இருப்பதால், 20 கிமீ தொலைவில் உள்ள தௌலத் பெக் ஓல்டி விமானநிலையத்திற்கு இந்திய துருப்புகள் செல்வதை தடுக்க முடியும்.

டெம்சோக்

மற்ற உராய்வு புள்ளி டெம்சோக்கில் உள்ள சார்டிங் நிங்லுங் நுல்லாவில் உள்ளது. சீனர்கள் அப்பகுதியில் மூன்று கூடாரங்களை அமைத்துள்ளனர். எல்ஏசி சார்டிங் நிங்லுங் நுல்லா வழியாக செல்கிறது. கிழக்கு லடாக் செக்டரில், இந்தியா சீனாவுடன் 832 கிமீ நீளமுள்ள எல்ஏசியை பகிர்ந்து கொள்கிறது.

இப்பகுதியில் மே 2020 முதல் இரு தரப்பும் 50,000 துருப்புக்கள், போர் விமானங்கள், பீரங்கி, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள், டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளன.

கொளுத்தும் வெப்பத்தில் இருந்து விடுதலை.. 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

click me!