பிரதமர் மோடி பழங்குடிகளின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய பழங்குடியினரின் கலையை ஊக்குவிக்க அவர்களின் கைவினைப் பொருட்களை தனது வெளிநாட்டு பயணத்தின் போது, சர்வதேச தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்குகிறார்.
ஆஸ்திரேலியா, பிரேசில், குக் தீவுகள், டோங்கா நாடுகளுக்கு டோக்ரா கலையை பிரதிபலிக்கும் பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். இது இந்திய வரலாற்றுக்கு முந்தைய கலை வடிவம்.
இயற்கை பின்னணியில் காதல் வெளிப்படும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை அமெரிக்காவுக்கு பரிசாக அளித்தார் பிரதமர் மோடி.
கோண்டு பழங்குடியினரின் ஓவியங்கள் தொன்மையான கலைவடிவம். கனடா நாட்டிற்கு பசுமையான ஓவியம் கொடுக்கப்பட்டது.
கோண்டு பழங்குடியினரின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியம் துவாலு நாட்டுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
குஜராத் பழங்குடிகளின் கலையை எடுத்துரைக்கும் பித்தோரா ஓவியக் கலை வடிவத்தை ஆஸ்திரேலியா நாட்டுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
மகாராஷ்டிரா, குஜராத் மாநில பழங்குடிகள் தீட்டும் வார்லி ஓவியங்களையும் கொமோரா நாட்டுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அகேட் கிண்ணத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். குஜராத் அகேட் கைவினைகளுக்கு பிரபலமானது.