பிரதமர் மோடியின் கைகளில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் செங்கோல்.. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ட்விஸ்ட்

By Raghupati RFirst Published May 24, 2023, 1:35 PM IST
Highlights

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை நிறுவ பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட இருப்பதாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அமித்ஷா, மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

“புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாதனை நேரத்தில் கட்டப்பட்டுள்ளது, அதைக் கட்டிய 60,000 தொழிலாளர்களை பிரதமர் பாராட்டி கவுரவிப்பார். புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர் மோடியின் நீண்ட கால பார்வையை காட்டுகிறது. செங்கோல் ஒன்றை மீண்டும் அறிமுகம் செய்வதாகவும் அறிவித்தார். அமித்ஷா "ஒரு வரலாற்று நிகழ்வு மீண்டும் மீண்டும் வருகிறது. இது செல்வச் செழிப்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்கது.

இதையும் படிங்க..யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் - யார் யார் தெரியுமா?

இது நாட்டின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. செங்கோல் ஒரு கலாச்சார பாரம்பரியம். இந்த சம்பவம் ஆகஸ்ட் 14, 1947 தொடர்பானது. இந்த செங்கோல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. 1947 ஆகஸ்ட் 14 அன்று ஆங்கிலேயர்களிடமிருந்து நேரு அதை ஏற்றுக்கொண்டார்” என்று அமித்ஷா கூறினார்.

இந்திய கலாச்சாரத்தில் குறிப்பாக தமிழர் கலாச்சாரத்தில் செங்கோல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். “சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்,'' என்றார். புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில்,பங்கேற்க மாட்டோம் என, எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!