கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை அடுத்துள்ள செருபுழா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சூரஜ் (12), சுஜின் (10) என்ற மகன்களும், சுரபி (8) என்ற மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீஜா பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
கண்ணூரில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை அடுத்துள்ள செருபுழா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சூரஜ் (12), சுஜின் (10) என்ற மகன்களும், சுரபி (8) என்ற மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீஜா பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாய் பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு.. ஆத்திரத்தில் மகள் செய்த காரியம்..!
இந்நிலையில், ஸ்ரீஜாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த 16ம் தேதி ஷாஜி என்பவரை ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார். ஷாஜி என்பவருக்கு ஏற்கனவே திருணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மனைவியும் உள்ளார். முதல் மனைவியை விவகாரத்து செய்யாமலேயே ஸ்ரீஜாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்தே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்பட்டாததால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 3 பிள்ளைகள் மேல் மாடிக்கு செல்லக்கூடிய படிக்கட்டில் தூக்குப்போட்டி கொலை செய்த பின்பு தம்பதி இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதையும் படிங்க;- தனியாக இருந்த ஆசிரியை வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்.. குற்றவாளி சிக்கியது எப்படி தெரியுமா?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.