தனியாக இருந்த ஆசிரியை வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்.. குற்றவாளி சிக்கியது எப்படி தெரியுமா?
வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா(45). இவர் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஆசிரியர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா ஆசிரிரையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்தனர். அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் கணேஷை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால், தனது இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.