கொளுத்தும் வெப்பத்தில் இருந்து விடுதலை.. 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
கொளுத்தும் வெப்பத்திலிருந்து விடுதலை அளிக்கும் வகையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் வடமேற்கு இந்தியாவில் இன்று முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருப்பதால், வடமேற்கு இந்தியா கடுமையான வெப்பத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது.
இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) தேசிய தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) செவ்வாய்க்கிழமை கணித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவில் வியாழன் வரை இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை துறை கணித்துள்ளது. வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் (வியாழன்) கனமழை பெய்யக்கூடும்” என்று IMD தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் தகவல்படி, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்காளம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் போன்ற கிழக்கு மாநிலங்களிலும் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும்.
ராஜஸ்தானில் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் புழுதிப் புயல் வீசக்கூடும். தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மே 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மாநிலத்தின் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் IMD மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது. கர்நாடகாவில் பருவமழைக்கு முந்தைய மழையின் போது 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் பருவமழைக்கு முந்தைய மழையால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். உடனடியாக நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
இதையும் படிங்க..யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் - யார் யார் தெரியுமா?