ஆசியாவின் 200 கோடி மக்கள் நீர், எரிசக்தி இன்றி பாதிக்கப்படுவர்; ஆபத்து பட்டியலில் இந்தியா!!

By Dhanalakshmi G  |  First Published May 24, 2023, 3:29 PM IST

ஆசியாவின் 16 நாடுகளில் வசிக்கும் சுமார் 200 கோடி மக்கள் நீரின்றி, எரிசக்தி இன்றி கடுமையான வறட்சிக்கு தள்ளப்படலாம் என்று சீனாவின் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


பருவநிலை மாற்றத்தால் இந்த தாக்குதல் பூமியில் ஏற்படும் என்று 'சீன வாட்டர் திங் டேங்' என்ற நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஹாங்காங்கில் உள்ளது. சீனாவின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்து குஷ் - இமயமலைப் பகுதியில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக பருவநிலை ஆசிய பிராந்தியத்தில் நீர் மற்றும் எரிசக்தி விநியோகத்தை கடுமையாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்து குஷ்-இமயமலையின் தண்ணீர் வரத்துப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் மாற்றங்கள் ஏற்படும்.

மேலும் அந்த ஆய்வில், ''பருவநிலை மாற்றத்தால் இந்து குஷ்-இமயமலைப் படுகை பாதிக்கப்படுவதால், இந்தியா உட்பட ஆசிய பிராந்தியத்தில் மோசமானபாதிப்பு இருக்கும். இந்து குஷ்-இமயமலைப் பகுதியில் இருந்து 10 முக்கிய ஆறுகள் உருவாகி இந்தியா மற்றும் சீனாவிற்கு நீர் ஆதாரமாக இருந்து வருகின்றன. இந்தப் பகுதியில் இந்த ஆறுகளை சார்ந்து ஏறக்குறைய 200 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த நீர்வரத்து ஆதாரங்கள் மூலம் ஆண்டுக்கு 4.3 டிரில்லியன் டாலர் அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

உலகின் துன்பமான நாடுகள் பட்டியல் : முதலிடத்தில் ஜிம்பாப்வே.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

இங்கு உற்பத்தியாகும் 10 ஆறுகளில் இந்தியாவில் ஓடும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளும் அடங்கும். இந்த ஆறுகள் வங்கதேசத்திற்கும் நீர் ஆதாரமாக இருக்கிறது.  சீனாவின் யாங்சே மற்றும் மஞ்சள் ஆறுகள், அத்துடன் மீகாங் மற்றும் சால்வீன் போன்ற எல்லை தாண்டிய ஆறுகளும் பாதிக்கப்படலாம். 

பனிப்பாறை உருகுதல் மற்றும் தீவிர வானிலை போன்ற பருவநிலை மாற்றங்கள் ஏற்கனவே தாக்கங்களை இப்பகுதியில் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இந்த ஆய்வும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. எரிசக்தி ஆற்றல் கட்டுமானப் பணிகளால் பிரச்னை மேலும் பெரிதாகிறது. 

பனிப்பாறை உருகுதல் மற்றும் தீவிர வானிலை போன்ற பருவநிலை மாற்றங்கள் ஏற்கனவே தாக்கங்களை இப்பகுதியில் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இந்த ஆய்வும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. எரிசக்தி ஆற்றல் கட்டுமானப் பணிகளால் பிரச்னை மேலும் பெரிதாகிறது. 

 இன்றும், 16 நாடுகளில் முக்கால்வாசி நீரில் இருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது. 44% நிலக்கரி மூலம் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. இந்த ஆறுகளில் இருந்துதான் நீரில் இருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது. ஜப்பானுக்கு 300 GW மின்சாரம் போதுமானது. இந்த மின்சார தயாரிப்பால் ஜப்பான் மிகவும் நீர் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் சூழலில் உள்ளது. 

மறுபுறம், சீனாவில் ஓடும் யாங்சே நதி அந்த நாட்டு மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு நீர் ஆதரமாக இருக்கிறது. நாட்டின் 15% மின் தேவையை பூர்த்தி செய்கிறது. இப்பகுதி ஏற்கனவே கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சியை சந்தித்து இருந்தது. நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உலகளாவிய விநியோக சந்தையை பாதித்து இருந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பருவநிலை மாற்றத்தால் நாடுகள் பாதிக்கப்படும் சூழலில் அந்தந்த நாடுகள்தான் சிறப்பு கொள்கைகளை வகுக்க வேண்டும். இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது நீடித்தால், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கடந்தாண்டு ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியது. ஐஐடி-இந்தூர் குழுவின் ஆய்வில், பனிப்பாறைகள் மற்றும் பனி உருகுவது இப்பகுதியில் தொடர்ந்தால்,  அது நூற்றாண்டுகளுக்கு நீடித்து, ஒரு நாள் நீர் வழங்குவது முற்றிலும் தடைபடும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி.. மூவர்ண கொடியால் ஜொலிக்கும் சிட்னி துறைமுகம், ஒபேரா ஹவுஸ்

click me!