குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் உடனே மீண்டும் பறக்கத் தொடங்கி 20 நிமிட தாமத்துக்குப் பின்பு முறையாக தரை இறங்கியது.
திங்கள்கிழமை இரவு சுமார் 100 பயணிகளுடன் சண்டிகரில் இருந்து அகமதாபாத் சென்ற 6E 6056 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிரங்கிய உடனே மீண்டும் வானத்தில் பறக்கத் தொடங்கியது. இதனால் சில நிமிடங்களுக்கு விமானத்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் தவித்தனர்.
இரவு 9.15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானம் தரை இறங்கியதும் சட்டென்று திரும்பவும் பறக்க ஆரம்பித்ததால் அச்சமும் குழப்பமும் அடைந்தனர். "இரவு 8.45 மணியளவில் விமானம் கீழே இறங்கத் தொடங்கியது, ஆனால் அதன் சக்கரங்கள் தரையைத் தொட்டவுடன் விமானி திடீரென மீண்டும் மேல்நோக்கிச் செலுத்தினார். இதனால், விமானம் மீண்டும் வானில் பறந்தது. என்ன நடந்தது என்று யாருக்கும் புரியாததால் நாங்கள் பீதியடைந்தோம்" என வதோதராவைச் சேர்ந்த டாக்டர் நீல் தக்கர் என்ற பயணி கூறுகிறார்.
"ஒரு வழியாக தரையிறங்குவதற்கு முன் விமானம் 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது" எனவும் டாக்டர் தக்கர் சொல்கிறார். "இந்த எதிர்பாராத நிகழ்வால் 100 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் ஆபத்தில் சிக்கி இருந்தது" எனவும் அவர் கூறினார்.
கேரளாவைக் கலக்கும் விஷ்ணு பம்பர் லாட்டரி! 12 கோடி பரிசு பெற்றது யார் தெரியுமா?
இது குறித்து டாக்டர் தக்கர் செவ்வாய்க்கிழமை இண்டிகோ விமான நிறுவனம், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.
விமானம் தரை இறங்குவதற்கான ஒப்புதல் கிடைக்காததால் தான் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், விமானியை உடனடியாக சிறிது நேரத்திற்கு மீண்டும் விமானத்தைப் பறக்கவிட்டுவிட்டு மீண்டும் சரியாக தரையிறங்குமாறு கோரினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விமானப் பயணிகளுக்கு காயம் அல்லது வேறு விதமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தரையிறங்கிய பின் விமானியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்ததாகவும் டாக்டர் தக்கர் தனது மின்னஞ்சலில் எழுதியுள்ளார். இது தகவல் தொடர்பு பிரச்சனையால் ஏற்பட்டது என்றும் விமானத்தை தரையிறக்க ஏடிசி அனுமதி முதலில் கொடுக்கப்படவில்லை என்றும் விமானி ஜக்திப் சிங் சொன்னதாக தக்கர் தெரிவிக்கிறார்.
ஆசியாவின் 200 கோடி மக்கள் நீர், எரிசக்தி இன்றி பாதிக்கப்படுவர்; ஆபத்து பட்டியலில் இந்தியா!!
"ஏடிசி அனுமதி இல்லாவிட்டால் முதலில் மட்டும் எப்படி விமானம் தரையிறங்க முடியும்? நான் இண்டிகோ ஏர்லைன்ஸின் பணி மேலாளரையும் அணுகினேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் விசாரணை நடத்தப்படும் என்று அவர் என்னிடம் கூறினார். அவர்கள் விரிவான விசாரணை செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்று டாக்டர் தக்கர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அதே விமானத்தில் இருந்த மற்றொரு பயணியான தேஜாஸ் ஜோஷி ட்விட்டரில் நடந்த சம்பவம் பற்றி பதிவு செய்துள்ளார். "இன்று, சண்டிகரில் இருந்து அகமதாபாத் சென்ற விமானம் 6E 6056 அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை. விமானம் ஓடுபாதையை அடைந்ததுமே மீண்டும் பறக்கத் தொடங்கிவிட்டது. இதனால் பயணிகளால் பீதி அடைந்தனர்" என்று ஜோஷி கூறியுள்ளார்.
சீனாவின் பிடியில் உள்ள தெப்சாங், டெம்சோக்கில் ரோந்து உரிமையை மீட்டெடுப்பதில் இந்தியா உறுதி