கர்நாடகாவில் ஹிஜாப் தடையை காங்கிரஸ் அரசு நீக்குமா? அமைச்சர் பரமேஸ்வரா சொன்ன பதில் இதுதான்..

By Ramya sFirst Published May 24, 2023, 6:09 PM IST
Highlights

கர்நாடகாவில் ஹிஜாப் தடை நீக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் பரமேஸ்வரா பதிலளித்துள்ளார்.

கர்நாடகாவின் புதிய காங்கிரஸ் அரசு, மக்களுக்கு அளித்த 5 உத்தரவாதங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்குப் பிறகுதான் முந்தைய அரசின் ஹிஜாப் தடையை திரும்பப் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் "ஹிஜாப் தடையை நீக்குவது தொடர்பாக எங்களால் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை எதிர்காலத்தில் பார்ப்போம். கர்நாடக மக்களுக்கு நாங்கள் அளித்த 5 உத்தரவாதங்களை இப்போதே நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்.

முன்னதாக கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை "உடனடியாக" நீக்க வேண்டும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கர்நாடக அரசை வலியுறுத்திது. மேலும், காங்கிரஸ் அரசு கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து நிலைநிறுத்த வேண்டும்' என்று அம்னெஸ்டி அமைப்பு கூறியிருந்தது.

இதையும் படிங்க : இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ 5,000 மற்றும் ரூ 10,000 நோட்டுகள்! எப்போது பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது?

அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் “ கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தடையானது முஸ்லிம் பெண்களின் கருத்து சுதந்திரம் மற்றும் மத உரிமைகள் மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தூண்டுகிறது, இது சமூகத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பைத் தடுக்கிறது." என்று தெரிவித்திருந்தது.

ஹிஜாப் சர்ச்சை என்றால் என்ன?

கடந்த ஆண்டு பிப்ரவரியில், கர்நாடகாவில் அப்போது இருந்த பாஜக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீருடை கட்டாயம் என்றும் ஹிஜாப் அணிவதற்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்றும் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவை அடிப்படை உரிமை மீறல் என்று கண்டித்தனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதான்ஷு துலியா, கர்நாடகா அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். எனினும் மற்றொரு நீதிபதி ஹேமந்த் குப்தா, கர்நாடக அரசின் தடை உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PM Kisan Yojana: கணவனும் மனைவியும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ ரூ.6000 பெற முடியுமா?

click me!