தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (45). இவர், தனது மனைவி வேலுத்தாய் (35), மாமியார் உடையம்மாள் (60), மகன் மனோஜ் குமார் (22) ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (45). இவர், தனது மனைவி வேலுத்தாய் (35), மாமியார் உடையம்மாள் (60), மகன் மனோஜ் குமார் (22) ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

அப்போது, பனவடலிசத்திரம் அருகே சென்றபோது அந்த வழியாகச் சென்ற தனியார் பள்ளி வேன் மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அதேபோல், தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.