ஹோமோ செக்ஸ் சரியா? தவறா??? இன்று வெளியாகிறது முக்கிய தீர்ப்பு!

By vinoth kumarFirst Published Sep 6, 2018, 9:21 AM IST
Highlights

ஓரினச்சேர்க்கை வழக்கில் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

ஓரினச்சேர்க்கை வழக்கில் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்று, அதற்கு, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில், 1861-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்திய குற்றவியல் சட்டத்தின், 377வது பிரிவின் கீழ், இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமாகும். இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து, 'நாஸ்' அறக்கட்டளை என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்தச் சட்டப் பிரிவு சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு 2013-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பில் மறுசீராய்வு மனு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மறுபுறம் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைலையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வில் விசாரித்தனர். கடந்த ஜூலை 17-ம் தேதி இந்த வழக்கு மீதான அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றப்பட்டன. இந்த வழக்கில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த 2 பேர், உறவு கொள்வதை அனுமதிப்பது குறித்து, நீதிமன்றத்தின் முடிவை ஏற்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. 

அதே நேரத்தில், இயற்கைக்கு புறம்பாக, சிறுவர் - சிறுமியர்  உறவு வைத்தால், அது குற்றமாகவே பார்க்கப்படும் என்பதில் மாற்றம் செய்யக் கூடாது என, மத்திய அரசு கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. 

click me!