PM Modi : நாடாளுமன்ற தேர்தல் ஒவ்வொரு கட்டமாக நடந்து வரும் நிலையில், பிரச்சாரத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பரப்புரைக்காக சென்று வருகின்றார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. தொடர்ச்சியாக ஏழு கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதுவரை இரண்டு கட்ட வாக்கு பதிவுகள் முடிந்துள்ள நிலையில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தங்களுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கர்நாடகாவிற்கு பிரச்சாரத்திற்காக சென்றார்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் சிர்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதற்காக அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடிற்கு சென்றார். ஆனால் அவர் முதலில் அந்த ஹெலிபேடில் இறங்கியதும், அங்கு அவர் ஸ்ரீமதி மோகினி கவுடாவை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார்.
undefined
EXCLUSIVE கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை: முதல்வர் சித்தராமையா பிரத்யேக பேட்டி!
யார் இந்த ஸ்ரீமதி மோகினி கவுடா?
ஸ்ரீமதி மோகினி கவுடா அங்கோலாவைச் சேர்ந்த பெண், தினமும் பழங்கள் விற்பனை செய்து வரும் வியாபாரி. அவர் அங்கோலா பேருந்து நிலையத்தில் இலைகளில் சுற்றி அவர் பழங்களை விற்கிறார். பிளாஸ்டிவ் பொருட்களை பயன்படுத்தாமல் மோகினி விற்பனை செய்து வருவது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
சரி மோகினியை பிரதமர் பாராட்ட காரணம் என்ன?
மோகினி பழங்களை இலையில் சுற்றி விற்கும்போது, சில நேரங்களில் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு சிலர் இலைகளை பேருந்துக்கு வெளியே வீசிவிடுவார்கள். அப்படி அவர்கள் வீசும் நேரத்தில், மோகினி அந்த இலைகளை எடுத்து அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போடும் தனிப் பண்பு அவருக்கு உண்டு. இதனால் தான் பிரதமர் மோடி அவர் செய்து வரும் நல்ல பணிகளுக்காக பாராட்டினார்.
பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் தொலைநோக்குப் பார்வைக்கு மக்கள் பங்களிப்பது போன்ற எடுத்துக்காட்டுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் சக்தியாக செயல்படுகின்றன என்றே கூறலாம்.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு!