Asianet News TamilAsianet News Tamil

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஜாமீன் கோரி தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்

Female SP sexually harassment case Former Special DGP Rajesh Das plea in supreme court seeking bail smp
Author
First Published Apr 29, 2024, 10:15 AM IST

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ராஜேஸ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதாகவும், தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அதேசமயம், ஜாமீன் கோரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதனால், அவர் உடனடியாக காவல் நிலையத்தில் சரணடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. இந்த நிலையில், பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஜாமீன் கோரி தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

வழக்கு பின்னணி


தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின்  சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.

250 பெண்களின் ஆபாச வீடியோ.. வசமாக சிக்கிய தேவகவுடா பேரன்.. கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா யார்?

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios