ரூ.270 கோடி வருமானத்துடன் சல்மான் கான் முதலிடம் 2016ம் ஆண்டு 100 பணக்கார, பிரபலங்கள் பட்டியல்  ‘போர்ஸ்’ வெளியீடு

First Published Dec 23, 2016, 7:01 PM IST
Highlights
ரூ.270 கோடி வருமானத்துடன்சல்மான் கான் முதலிடம்

2016ம் ஆண்டு 100 பணக்கார, பிரபலங்கள் பட்டியல்  ‘போர்ஸ்’ வெளியீடு

 

2016-ம் ஆண்டில் நாட்டில் 100 பணக்கார, பிரபலங்களின் வருமானம் குறித்து போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டதில், இந்தி நடிகர் சல்மான் கான் ரூ. 270.33 கோடி வருமானத்துடன் முதலிடத்தில் பெற்றுள்ளார்.

புகழின் அடிப்படையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி முதலிடத்தையும், இந்தி நடிகர் அக் ஷய் குமார், எம்.எஸ். தோனி அடுத்தடுத்து உள்ளனர்  பிடித்துள்ளார்.

நாட்டில் உள்ள பிரபலங்களின் வருமானம், புகழ் அடிப்படையில், ஆண்டு தோறும் 100 பேரை பட்டியலிட்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக  இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 2015 அக்டோபர் மாதம் முதல் 2016 அக்டோபர் மாதம் கணக்கில் எடுக்கப்பட்டது.

2016-ம் ஆண்டுக்கான பட்டியலில் வருமானத்தின் அடிப்படையில் இந்தி நடிகரும், 50வயதான சல்மான் கான் ரூ.270.33 கோடி வருமானத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். புகழின் அடிப்படையில் 2-ம் இடம் வகிக்கிறார். ஒட்டுமொத்தமாக 100 பிரபலங்களின் வருமான மதிப்பு ரூ.2 ஆயிரத்து 745 கோடியாகும். இதில் சல்மான்கானின் வருமானம் மட்டும் ஒட்டுமொத்தத்தில் 10  சதவீதமாகும்.

இந்தி நடிகர் ஷாருக் கான் வருமானத்தின் அடிப்படையில் ரூ.221.75 கோடி ஈட்டி, 2-ம் இடத்தையும், புகழில் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு இவரின் படங்கள் சில வெற்றியும், தோல்வியும் கலந்து வந்ததால், தரவரிசையில் குறைந்தார்.

புகழின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி முதலிடத்தையும், வருமானத்தின் அடிப்படையில் ரூ.134.44 கோடி ஈட்டி 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார். கடந்த 2015ம் ஆண்டில் கோலி 7-ம் இடத்தில் இருந்தார்.

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் புகழின் அடிப்படையில் 11ம் இடத்தில் இருந்து 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி புகழின் அடிப்படையில் 4-ம் இடத்திலும், வருமானத்தின் அடிப்படையில் ரூ.122.48 கோடியுடன் உள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வருமானம் அடிப்படையில் ரூ.69.75 கோடியுடன் 6-ம் இடத்திலும், புகழில் 8-ம் இடத்திலும் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் வருவாய் அடிப்படையில் ரூ.58 கோடியுடன் 7-ம் இடத்திலும், புகழின் அடிப்படையில் 6-ம் இடத்திலும் உள்ளார்.

நடிகை ப்ரியங்கா சோப்ரா ரூ.76 கோடியுடன் 8ம் இடத்திலும், நடிகர் அமிதாப் பச்சன் ரூ.32.62 கோடியுடன் 9-ம் இடத்திலும்,நடிகர் ஹிர்திக் ரோஷன் ரூ.90.25 கோடியுடன் 10ம் இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டு தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தரவரிசையில் 39 இடங்கள் முன்னேறி  69ம் இடத்தில் இருந்து 30-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். எழுத்தாளர் சேட்டன் பாகத் 26 இடம் முன்னேறி 40ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

click me!