அதிகாரம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா? கார்கே, சித்தராமையாவிடம் ராகுல் காந்தி கேள்வி!

By Manikanda Prabu  |  First Published May 5, 2024, 2:10 PM IST

அதிகாரம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா? என அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற 7ஆம் தேதி 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பிராசாரத்திற்கு இடையே கட்சியின் மூத்தவர்களாக அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் ராகுல் காந்தி சில கேள்விகளை கேட்டு அதனை வீடியோவாக எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ராகுலிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. தேர்தல் பிரசாரத்தின் சிறந்த பகுதி எது? என்ர கேள்வுக்கு அது நிறைவாகும் தருணம் என பதிலளிக்கிறார் ராகுல் காந்தி. பிரச்சாரத்தில் இருப்பதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி? என்ற கேள்விக்கு, “70 நாட்களுக்கு மேலாக தேர்தல் பிரசாரம் சென்று கொண்டிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை தேர்தல் பிரசாரம் அல்ல; ஆனால், இதனை விட கடினமாக வேலை பார்க்க வேண்டியதிருந்தது. எனவே, நீண்ட நாட்களாக சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு பேச்சுகள் பிடிக்கும். ஒரு விஷயம்தான். அது நாட்டிற்கு என்ன தேவை என்பதை பொருத்தது.” என்கிறார்.

 

A day campaigning in Karnataka.

Some light rapid fire questions and some very illustrious company. pic.twitter.com/xHoqK3AF5T

— Rahul Gandhi (@RahulGandhi)

 

அதன் தொடர்ச்சியாக, காரில் சென்று கொண்டிருக்கும் போது, அதிகாரம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா? என அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். அதன் விவரம் பின்வருமாறு;

ராகுல் காந்தி  கேள்வி: சித்தராமையா ஜி எனக்கு பதில் சொல்லுங்கள் அதிகாரம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா? 

சித்தராமையா பதில்: சித்தாந்தம்தான் முக்கியம். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வது முக்கியம். அதிகாரம் நமது கைக்கு வந்தால் கூட அந்த அதிகாரத்தை வைத்து அடித்தட்டு மக்களுக்கு என்னவெல்லாம் நன்மை செய்கிறோம் என்பதை நாம் எடுத்துக் கூற வேண்டும். அப்போது மக்கள் நமது சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டு நம்மை வாழ்த்துவார்கள். 

ராகுல் காந்தி  கேள்வி: கார்கே ஜி அதிகாரம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா?

கார்கே பதில்: அதிகாரம் வரும் போகும். சித்தாந்தம் நிரந்தரமானது. சித்தாந்தத்தில் உறுதி வேண்டும். நமது முந்தைய தலைமுறை தலைவர்கள் சித்தாந்தத்துக்காக தியாகம் செய்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

மதுரையில் பிறந்தநாள் அன்று நீட் தேர்வு எழுத வந்த 50 வயது வழக்கறிஞர்!

ராகுல் காந்தி விளக்கம்: கார்கே ஜி, சித்தராமையா ஜி இருவரும் சொல்வதை நான் ஏற்கிறேன். சித்தாந்தத் தெளிவு இல்லாமல் ஒரு மிகப்பெரிய கட்சி அதிகாரத்துக்கு வர முடியாது. ஏழை மக்களுக்கு நன்மை செய்வது பெண்களுக்கு நன்மை செய்வது அனைத்து தரப்பினரின் நல்லிணக்கம், அனைவரையும் உயர்வு தாழ்வின்றி சமமாக நடத்துவது  இவைதான் நம்முடைய சித்தாந்தம். கட்சி அளவிலும் சரி இந்திய அரசியல் அளவிலும் சரி நமது போராட்டம் என்பது சரியான சித்தாந்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கானதுதான்.

தொடர்ந்து நீங்கள் ஏன் எப்போதும் வெள்ளை ஆடை அணிகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “வெளிப்படைத் தன்மை மட்டும் எளிமை. நான் எனது ஆடைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. எளிமையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.” என ராகுல் காந்தி பதிலளிக்கிறார்.

click me!