உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்.
இளைஞர்கள் பலரும் தங்கள் உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்கு செல்கின்றனர். அதற்காகவே டயட் எல்லாம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால், ஜிம்முக்கு செல்வதற்கு முன்பாக சில உணவுகளை மட்டும் உண்ணக்கூடாது. தீவிரமான உடற்பயிற்சிக்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்படும் உணவு தான் நம்முடைய செயல்திறனை நிர்ணயம் செய்கிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக எதையும் உண்ணாமல் இருப்பது செயல்திறனை குறைக்கும். அதே சமயத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக தவறான உணவை உண்பதும் நம்முடைய செயல்திறனை பாதிக்கிறது. உடற்பயிற்சிக்கு நடுவே வயிறு வீங்கியதாகவோ, வாய்வுத் தொல்லையாகவோ அல்லது அடிக்கடி இடைவேளைத் தேவைப்பட்டாலோ உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்.
உடற்பயிற்சிக்கு முன் எடுத்து கொள்ள கூடாதவை
undefined
ஆளி விதையில் அதிகளவில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது, நிச்சயமாக உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், அதிகளவிலான நார்ச்சத்து வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடற்பயிற்சியைத் தடுக்க வாய்ப்புள்ளது. யாராக இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக அதிகளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. ஆளிவிதை தவிர்த்து ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ், காய்கறி சாலடுகள் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து கொண்ட வேகவைத்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
புரோட்டின்கள் உணவுகள்
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டின்கள் அதிகமுள்ள உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலனைத் தரும். உங்களுடைய புரோட்டின் பாரில் 10 கிராமுக்கும் குறைவாக புரதம் இருந்தால், அது இரத்த சர்க்கரையின் அளவை வேகமாக குறைத்து விடுவதால், நீங்கள் வேகமாக சோர்வடைந்து விடுவீர்கள்.
Oil: உடலுக்கு நன்மை செய்யும் எண்ணெய் வகைகள் எவை! சில முக்கிய தகவல்கள்!
குறைந்த அளவு கொழுப்புள்ள பால் கூட உடற்பயிற்சியின் போது உடலைத் தடுக்க வாய்ப்புள்ளது. புரோட்டின், ஆற்றலின் முதன்மையான ஆதாரம் மற்றும் தசைகளை மீட்டெடுக்கவும் உதவி புரிகிறது. இருப்பினும், அதிக புரத உணவுகள் மற்றும் பானங்களில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் இல்லையெனில், அவை ஆற்றலை வேகமாக வெளியேற்றி விடும். கொழுப்புகளைப் போலத்தான், புரதமும் இரத்தத்திற்கு மெதுவாக செல்கிறது. ஒரு பெரிய அளவில் உணவை சாப்பிட்டாலும் சோர்வாகவும், நடுங்குவது போன்ற உணர்வுகள் ஏற்படும் என கூறப்படுகிறது.