காலையில் டீயுடன் ரஸ்க் சாப்பிடுபவரா நீங்கள்? அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

By Narendran SFirst Published Jan 11, 2023, 10:41 PM IST
Highlights

தினமும் அதிகாலை டீயுடன் ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். 

தினமும் அதிகாலை டீயுடன் ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். பெரும்பாலான இந்திய வீடுகளில், சூடான தேநீர் கோப்பையுடன் ரஸ்கை ருசிப்பது தினசரி பழக்கமாக உள்ளது. ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை ஆரோக்கியத்திற்கு சிறந்ததல்ல என்பதற்கான சில அதிர்ச்சியூட்டும் காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

நிபுணர்கள் சொல்வது என்ன? 

ரஸ்க் என்பது ஈரத்தன்மையற்ற மற்றும் சர்க்கரையாலான ரொட்டியாகும். இது பல பொருட்களுடன் சுவையாக தயாரிக்கப்படுகிறது. இதன் இனிமையான சுவை ஆரோக்கியமானதாக தோன்றலாம், ஆனால் அவை டிரான்ஸ் கொழுப்புகள், சர்க்கரை மற்றும் பசையம் ஆகியவற்றால் நிரப்பட்டுள்ளது. இது படிப்படியாக ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஒரு ஆய்வின்படி, ரொட்டியை விட ரஸ்க்களில் அதிக கலோரிகள் உள்ளன. சுமார் 100 கிராம் ரஸ்க் பிஸ்கட்டில் சுமார் 407 கிலோகலோரி இருக்கலாம். உண்மையில், ஒரு வெள்ளை ரொட்டியில் சர்க்கரை சேர்க்காமல் 258-281 கிலோகலோரி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இந்த பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து மகிழலாம் வாங்க!

ஏன் ரஸ்க்குகள் பழைய ரொட்டியில் தயாரிக்கப்படுகின்றன?

மற்றொரு அறிக்கையின்படி, ரஸ்க் பெரும்பாலும் பழைய ரொட்டியில் தயாரிக்கப்படுகிறது, இதுவும் ஆரோகியத்தை பாதிக்கும் ஒரு காரணம். ரஸ்க் பிஸ்கட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று ஈஸ்ட், சர்க்கரை, எண்ணெய் மற்றும் மாவு. ஆனால் பெரும்பாலான கடைகளில் வாங்கும் ரஸ்க் பழமையான ரொட்டிகளால் தயாரிக்கப்படுகின்றன. காலாவதியான ரொட்டிகளில் நோய்க்கிருமிகள் இருக்கலாம், அவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் உணவு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். புதிதாக பேக் செய்யப்பட்ட ரஸ்க் பிஸ்கட்டுகளுக்கும் இதுவே அனுப்பப்படுகிறது.

சர்க்கரை:

சர்க்கரை கலந்திருக்கும் தேநீருடன் சர்க்கரையால் தயாரிக்கப்பட்டrஅஸ்கை சாப்பிடும் போது அது திருப்தி அளிக்கலாம், ஆனால் அதே நேரத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் அளவை அது பாதித்து ரஸ்க்கை தினமும் உட்கொள்வதால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. 

இதையும் படிங்க: வியர்வை நாற்றம் குடலை புடுங்குதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

பசையம் நிறைந்தது:

ரொட்டிகளைப் போலவே, ரஸ்க்களிலும் அதிக அளவு பசையம் உள்ளது. இது ஜீரணிப்பதை கடினமாக்குகிறது. செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரஸ்க் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது சில சமயங்களில் வீக்கம், வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும் அசௌகரியத்தை அதிகரிக்கும்.

கார்போஹைட்ரேட்: 

கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள ரஸ்க், பால் அல்லது டீயுடன் இணைந்தால், கலோரி எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ட்ரைகிளிசரைடு அளவையும் அதிகரிக்கிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. 

click me!