நகங்களில் தோன்றும் திடீர் மாறுபாடு- இந்த நோய் பாதிப்பாகக் கூட இருக்கலாம்.!!

By Dinesh TGFirst Published Jan 3, 2023, 5:37 PM IST
Highlights

சளி, காய்ச்சல் அல்லது ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் நோய் பாதிப்பு கவனிக்கப்படாமல் போகலாம். இருமல் மாசுபாடு, தொண்டை புண், சளி அல்லது காய்ச்சல் 3 வாரங்களுக்கு மேல் நீடித்தால், அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

நுரையீரல் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டி வளர்ந்தால், அது நுரையீரல் புற்றுநோயாக அறியப்படுகிறது. இந்தியாவில் 8.1 சதவீத புற்றுநோய் இறப்புகளில் 5.9 சதவீதம் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படுகிறது. அந்த வகையில், அதிகளவில் நாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தும் புற்றுநோய் பட்டியலில் இது நான்காவது இடத்தில் உள்ளது. சளி, காய்ச்சல் அல்லது ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் இருப்பதால் பல நேரங்களில் நோய் கவனிக்கப்படாமல் போகலாம்.

இருமல், தொண்டை புண், சளி அல்லது காய்ச்சல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இந்த பாதிப்பு தொடர்ந்து 3 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லை. எனவே சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான பிரத்தியேகங்களை நினைவில் கொள்வது அவசியம்.

நகங்களின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாக சுட்டிக்காட்டப்படுகிறது. விரல்கள் மற்றும் நகங்களின் வடிவத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் ஃபிங்கர் கிளப்பிங், டிஜிட்டல் கிளப்பிங் அல்லது ஹிப்போகிராட்டிக் விரல் என்றும் அழைக்கப்படுகின்றன. இது நுரையீரல் புற்றுநோயின் சில முக்கிய அறிகுறி என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுதவிர,

அடிக்கடி வறண்டு போகும் உதடுகளை பாதுகாக்க இதைச் செய்யுங்க போதும்..!!

  • -தொடர்ச்சியான மூச்சுத் திணறல் இழப்பு
  • -பசியின்மை
  • -எடை இழப்பு
  • -மார்ப்புச் சளி
  • -அதிக சோர்வு
  • -முகம் அல்லது கழுத்தில் வீக்கம்
  • -விழுங்குவதில் சிரமம்
  • -தொடர்ந்து மார்பு அல்லது தோள்பட்டை வலி

போன்றவை நுரையீறல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியும் போது புற்றுநோயின் நிலை மற்றும் வகை உட்பட பல காரணிகள் நோயாளியின் உயிர்வாழ்வை தீர்மானிக்கின்றன. ஒரு நோயாளிக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோயின் வகை அது எந்த உயிரணுவிலிருந்து தொடங்கியது என்பதைப் பொறுத்தது. சிறிய செல் நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 20 சதவீதம் பொதுவாக புகைபிடிப்பதால் ஏற்படுகின்றன. உயிரணு நுரையீரல் புற்றுநோயானது 85 சதவீதம் புறகாரணிகளால் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!