Sexual Health: சீக்கிரமே விந்து வெளியேறிவிடுகிறதா? எளிமையான தீர்வு!

By Pani MonishaFirst Published Dec 31, 2022, 12:40 PM IST
Highlights

இன்றைய காலத்தில் பல ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறிவிடுகிறது. உடலுறவு கொண்ட சிறிது நேரத்திலேயே விந்து வெளியேறிவிடுவதால் திருப்தியான உடலுறவு கொள்ள முடியாது.   

உடலுறவுக்கு முன்னரோ அல்லது சிறிது நேரத்திலோ விந்து வெளியேறுவதை விந்து முந்துதல் என்கிறார்கள். பல பிரச்சனைகள் முக்கியமாக இருக்க ஏன் இது குறித்து பேச வேண்டும் என நினைக்கிறீர்களா? அதுதான் விந்து வெளியேறி ஆண் உச்சம் அடைந்துவிடுவானே என தோன்றுகிறதா? வெறுமனே விந்து வெளியேறுதல் மட்டும் உடலுறவில் ஈடுபடுவதை அர்த்தப்படுத்துவதில்லை. உலகில் 70 விழுக்காடு ஆண்கள் இந்த பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதனால் ஆண், பெண் இருவரும்தான் உடலுறவு கொள்ளும் சமயங்களில் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு ப்ரேக்- அப், விவகாரத்து ஆக கூட இதுதான் காரணமாக அமைகிறது. 

விந்து ஏன் வெளியேறுகிறது? 

பெரும்பாலான ஆண்கள் உடலுறவு கொண்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு விந்து வெளியேறுவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. மன அழுத்தம், அதிக மது அருந்துதல், சுயஇன்பம், ஓரல் செக்ஸ் எனும் வாய்வழி உறவு, பயம், மன அழுத்தம், இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடுதல், சோர்வு, உடல் வெப்பநிலை அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் இதற்கு காரணமாகின்றன. இந்த பிரச்சனை எப்போதாவது ஒருமுறை வந்தால் கவலைப்படத் தேவையில்லை. அடிக்கடி இந்த பிரச்சனையால் அவதிப்பட்டால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இந்தச் சிக்கலில் இருந்து விடுபட சில ஆலோசனைகள் உதவும். 

இதையும் படிங்க; Star anise: நலம் தரும் நட்சத்திர சோம்பு.. பாலியல் வாழ்க்கையின் ப்ளஸ்!

ஆணுறை பயன்படுத்துங்கள் 

ஆணுறைகள் அணிவது விரைவில் விந்து வெளியேறுதலை நிறுத்தும். சென்சிடிவான ஆண்கள் ஆணுறைகளை அணிவதால் விரைவில் விந்து முந்துதல் பிரச்சனையை பெருமளவு குறைக்கலாம். ஆணுறைகள் கர்ப்பத்தைத் தடுக்கவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் சிறந்தவை.  

இடைவெளியை பின்பற்றுங்கள்  

உடலுறவின் போது அல்லது சுயஇன்பத்தின் போது நீங்கள் விந்து வெளியேறத் தயாராக இருக்கும் போது உடலுறவு கொள்வதை சிறிது நேரம் நிறுத்துங்கள். விந்து வெளியேறும் உந்துதலை நிறுத்த உங்கள் ஆணுறுப்பின் மேற்பகுதியை அழுத்தவும். அதே நிலையில் 30 வினாடிகள் காத்திருக்கவும். இது விந்து வெளியேறும் விருப்பத்தை குறைக்கிறது. அதன் பின்னர் நீங்கள் மீண்டும் உடலுறவு கொள்ளலாம். இது உடலுறவில் நீண்ட நேரம் இன்பம் பெற வைக்கும்.  

பொசிஷனை பார்த்துக்கங்க! 

உறவு கொள்ளும்போது சில பொசிஷன்கள் உங்களை மிகவும் சுறுசுறுப்பாக மாற்றும். உடலுறவில் நீண்ட காலம் நீடிக்க சில பொசிஷன்கள் உள்ளன. ஆணுறுப்பின் உணர்ச்சி அதிகம் உள்ள பகுதிகளுக்கு குறைவான உந்துதலை அளிக்கும் பொசிஷன்களை தேர்வு செய்யுங்கள். அது விந்து முந்துதலை குறைக்கும். ஆண், பெண் இருவருக்கும் விருப்பமான பொசிஷனை தேர்வு செய்யுங்கள். 

கெகல் பயிற்சி பண்ணலாம்! 

கெகல் பயிற்சிகள் பெண்களுக்கு மட்டுமல்ல, இவை ஆண்களுக்கும் பாலியல் ஆசையை அதிகரிக்கும். தொடர்ந்து இப்பயிற்சிகளை செய்வதால் பாலியல் செயல்திறன் மேம்படுகிறது. இந்த கெகல் பயிற்சிகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்யலாம். இதனை செய்வதற்கு முன் உங்கள் சிறுநீர் கழித்து கொள்ளுங்கள். இந்த பயிற்சிகள் இடுப்பு தசைகளை வலுப்படுத்துகின்றன. 

இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க! 

விந்து முந்துதல் பிரச்சனை இருந்தாலும் உங்கள் இணையரை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும். அதற்கு அ, ஆ, இ,ஈ என்ற எழுத்துகளில் ஒரு ட்ரிக் ஒளிந்துள்ளது. அ என்றால் பெண்ணுறுப்பின் மேற்புறம் அதனை தொட்டு உணர்வை தூண்டலாம். ஆ என்றால் பெண்ணின் மார்பகம், இ என்றால் ஆணுறுப்புக்கு இணையான பெண்ணுறுப்பின் கிளிட்டோரியஸ், ஈ என்றாலும் பெண்ணுறுப்பின் மேற்புற பகுதி தான் இவற்றை மென்மையாக தொடும்போது அவர்கள் இன்பம் அடையக் கூடும். இதன் மூலம் விந்து முந்துதல் பிரச்சனைக்கு முன்னதாகவே உங்கள் மனைவியை மகிழ்விக்க முடியும். 

இதையும் படிங்க; #Star anise நலம் தரும் நட்சத்திர சோம்பு.. பாலியல் வாழ்க்கையின் ப்ளஸ்

click me!