சர்க்கரை நோய்க்கு பால் பொருட்கள் தீர்வா?

உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியமானது. குறைந்த மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

How milk affects blood sugar levels

உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியா தற்போது உலகில் நீரிழிவு நோயாளிகளின் தலைநகரமாக மாறி வருகிறது.

ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் முக்கியமான ஒன்று ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆகும். உணவு பழக்கத்தைப் பொறுத்தவரை பல தலைமுறைகளாக மக்கள் பால் மற்றும் பால் பொருட்களை சார்ந்தே உள்ளனர். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் டி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Latest Videos

குறைந்த மற்றும் அதிக கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் டைப் 2 நீரிழிவு நோய்க்கான தடுப்பு நடவடிக்கையாகவும், நீரிழிவு நோய் சிகிச்சைக்கு தீர்வாக செயல்படும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பால் பொருட்கள் நீரிழிவு நோயை பாதிக்குமா?:

பால் மற்றும் பால் பொருட்களில் அதிகளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம், டைப்  2 நீரிழிவு நோய் ஏற்படுதல், மற்றும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை வளர்ச்சி குறைபடுவதை ஆய்வுகள் காட்டுகின்றன என நீரிழிவு நோய் மருத்துவர் அங்கிதா டிவாரி கூறுகிறார். இந்த இரண்டு முக்கிய தாதுக்களும், இன்சுலின் சென்சிடிவிட்டி மற்றும் குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கின்றன.

ரேஷன் அரிசில பஞ்சு போன்ற இட்லி!! மாவு அரைக்க சூப்பர் டிப்ஸ்..

பால் பொருட்களில் உள்ள வைட்டமின் டி, மெட்டபாலிக் ஆரோக்கியத்திற்கு தொடர்புடைய ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். பல நாடுகள் கட்டமைக்கப்பட்ட செறிவூட்டல் அமைப்புகளை பாராமரிக்கின்றன. ஆனால் மற்ற நாடுகளில் அத்தகைய திட்டங்கள் இல்லாததால், உணவு செறிவூட்டலின் அளவு  அளவு வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது.

போதுமான வைட்டமின் டி உட்கொள்ளும் மக்கள் சிறந்த இன்சுலின் செயல்பாட்டையும் சிறந்த வளர்சிதை மாற்ற விளைவுகளையும் அனுபவிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வானது டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பால் பொருட்களை சேர்த்து கொள்ள அறிவுறுத்துவதுடன் தற்போதைய உணவு பழக்கவழக்கங்களையும் வெளிபடுத்துகிறது.

மேலும் தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் வளர்சிதை மாற்ற செயல்பாடு மற்றும் குடல் ஆரோக்கியதிற்கு நன்மை பயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நோயை கட்டுப்படுத்துவதற்கான முழு விவரங்களும் கண்டறியப்படாத நிலையில், நோயையை கட்டுப்படுத்துவதற்காண உணவுமுறை குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை இல்லாத காபி காலையில குடிச்சி தான் பாருங்களே; 'இந்த' நன்மைகள் கிடைக்கும்!

click me!