விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு! இனி 'இந்த' கட்டணம் கிடையாது!

Published : Mar 07, 2025, 12:19 AM IST
விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு! இனி 'இந்த' கட்டணம் கிடையாது!

சுருக்கம்

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வயிற்றில் பாலை பார்க்கும் விதமாக சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Tamilnadu Government Maize farmers: விவசாயிகள் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் மக்காச்சோளப்பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 29 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

மக்காச்சோள சாகுபடி

மக்காச்சோளம் பெரும்பாலும் தீவனத்தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக அதன் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசால் மக்காச்சோள சாகுபடி பெருமளவில் விவசாயிகளிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

1987-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கு கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய 7 விற்பனைக்குழுக்களின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஒரு கிலோ தக்காளி வெறும் 4 ரூபாய்.! சந்தோஷத்தில் பை நிறைய அள்ளும் இல்லத்தரசிகள்

ஒரு சதவீத சந்தைக்கட்டணம்

இந்நிலையில் மக்காச்சோளத்தின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி மேற்கொள்ளப்பட்டு பரப்பு அதிகரித்து உற்பத்தி உயர்ந்ததை ஒட்டி மக்காச்சோள விற்பனையை முறைப்படுத்திட வேண்டுமென்பதற்காக பெரம்பலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கடலூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் அரியலூர் ஆகிய 16 விற்பனைக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள

161 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 1987-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9(1)(d)-ன் படி வேளாண் விளைபொருளான மக்காச்சோளம் அறிவிக்கை செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழ் எண்.1 நாள்:01.01.2025-ல் வெளியிடப்பட்டது. இதன்படி இப்பகுதிகளில் மக்காச்சோள வர்த்தகத்திற்கு ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

சந்தைக்கட்டணம் ரத்து 

இதனைத்தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகளை ஆராய்ந்து அதற்கேற்ப 1987-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9(1)(d)-ன் படி வெளியிடப்பட்ட வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கான அறிவிக்கை தமிழ்நாட்டின் அனைத்து விற்பனைக்குழு பகுதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசிதழ் விரைவில் வெளியிடப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு குட்நியூஸ்.! தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு
 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Free Ration Alert: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்! இலவச அரிசி வாங்க தகுதியில்லாதவர்கள் யார்? ஆய்வில் அம்பலம்!
Tamilnadu Weather : 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை... சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்