சனாதன தர்மம் விவகாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது எந்த ஒரு புதிய வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரதிவாதிகள் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உதயநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும். உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.