உங்கள் குழந்தைக்கு டெங்கு இருக்கா? கண்டறிவது இப்படிதான்... தீர்வும் இருக்கு!

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 14, 2018, 2:14 PM IST
Highlights

குழந்தைகளுக்கு டெங்கு வந்தால் 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும்

அறிகுறிகள்:

1.. குழந்தைகளுக்கு டெங்கு வந்தால் 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும். உடல் வலி, கண்களைச் சுற்றியும் வலி இருக்கும். வாந்தி எடுப்பர். 

2.. மூக்கு மற்றும் வாய் வழியாக இரத்தம் வரும். குழந்தைகள் கருப்பு நிறத்தில் மலம் கழிப்பர். சிறுநீரிலும் இரத்தம் சேர்ந்து வரும். உடலில் இரத்தப் புள்ளிகள் தோன்றும். 

3.. மூட்டு மற்றும் தசை வலி உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி இருக்கும். 

4.. பசியிண்மையும் இருக்கும். தொண்டைப்புண், பல் ஈறுகளில் இருந்து இரத்தம் வடியும். 

தீர்வுகள்:

1.. உடல் சோர்வாக இருக்கும்போது அதிக நீர்ச்சத்து தேவைப்படும். எனவே, தண்ணீர், பழ ஜூஸ்கள் கொடுப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

2.. கொசுக்கள் மூலமாக பரவும் டெங்குவை வராமல் தடுக்க வீட்டுக்கு வெளியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.  குழந்தைகள் உறங்கும்போது கொசுவலையை பயன்படுத்தலாம்.

3.. டெங்கு பாதிப்பு இருக்கிறது என்று சந்தேகம் வந்தால் கூட உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.

4.. குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்புச் சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்.

click me!