பாகற்காயை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது..!!

By Dinesh TGFirst Published Dec 17, 2022, 10:17 AM IST
Highlights

பாகற்காயை சாப்பிடுவதால் உடல்நலனுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகுகின்றன. எனினும், அதை அளவுடன் தான் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் பாகற்காய் கசப்பான சுவையை கொண்டது. நம்முடைய உணவுகளில் அவ்வப்போது பாகற்காயை சேர்த்துக்கொண்டால், சக்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும், வயிறு தொடர்பான பிரச்னைகள் குறையும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கும். பாகற்காயில் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் கொலஸ்ட்ரால் சதவீதம் மிகவும் குறைவு என்பதால், வைட்டமின் பி6, இரும்பு, பாஸ்பரஸ், பாந்தோனிக் அமிலம், தியாமின் மற்றும் ரெபோஃப்ளேவின் ஆகியவை நிறைந்துள்ளன. பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், உடல்நலம் மேம்படும். 

பாகற்காயை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த காயை சாப்பிட்டவுடன், சாப்பிடக்கூடாத சில காய்கறிகள் என்று உள்ளன. பாகற்காயை சாப்பிட்டுவிட்டு, அந்த காயை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது கிடையாது. அப்படி சாப்பிட்டால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அதுதொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வோம்.

பால்

பாகற்காய் உணவுகளை சாப்பிட்டுவிட்டு பால் அருந்தக்கூடாது, பால் பொருட்களை சாப்பிடக் கூடாது. இவை இரண்டும் இணைந்தால் வயிற்றில் பல்வேறு பிரச்னைகள் தோன்றும். மலச்சிக்கல், வயிற்றில் வலி, நெஞ்செரிச்சல் வயிறு உபசம் போன்ற பாதிப்புகள் தோன்றும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஒருவேளை இரண்டையும் தெரியாமல் சாப்பிட்டால், செரிமானப் பிரச்னை ஏற்படும்.  உறுப்புகள் உணவை செரிமானப்படுத்த மிகவும் சிரமபப்படும். இதனால் உறுப்புகளின் ஆரோக்கியம் வலுவிழக்கும்.

மாம்பழம்

மாம்பழத்தை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு தீங்கை விளைவிக்கும். பாகற்காயை சாப்பிடவுடன் மாம்பழம் சாப்பிட்டால் வாந்தி, எரிச்சல், குமட்டல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உண்மையில் இந்த இரண்டு பொருட்களும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் உறுப்புகள் பாதிக்கப்படும்.

தசைப் பிடிப்பில் இருந்து பாதுகாக்கும் 5 அற்புதமான உணவுகள்..!!

முள்ளங்கி

பாகற்காயை சாப்பிட்டவுடன் முள்ளங்கி, முள்ளங்கியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். முள்ளங்கி, பாகற்காயும் வெவ்வேறு சுவை கொண்டவை. இதை சேர்த்து சாப்பிட்டால் ஒரு வகையான தொண்டை எரிச்சல், இருமல், அமிலத்தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தயிர்

நம் ஆரோக்கியத்திற்கு தயிர் முக்கியமாக தேவைப்படக்கூடிய உணவாகும். பாகற்காய் மற்றும் தயிர் இரண்டிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், தோல் வெடிப்பு வர வாய்ப்பு உள்ளது. பித்தம் தலைக்கு ஏறி, தலை சுற்றி வாந்த வரவும் வாய்ப்புள்ளது.
 

click me!