ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறை பயன்படுத்தலாமா? அது பலன் தருமா? இல்லை ஆபத்தானதா? முழு விவரம்!

By Asianet Tamil  |  First Published Aug 31, 2023, 2:48 PM IST

குழந்தை பிறப்பை தள்ளி வைக்க பொதுவாக தம்பதியர்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களில் ஒன்றுதான் ஆணுறைகள். ஆனால் இன்றளவும் இந்த ஆணுறுகளை பயன்படுத்துவது குறித்து பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


சரி ஆணுறை பயன்படுத்துவது நல்லதா? 

மருத்துவர்கள் மற்றும் அரசு பரிந்துரை செய்யும் அனைத்து விதமான கருத்தடை சாதனங்களும் பயன்படுத்த உகந்தது தான். ஆகவே பாலியல் ரீதியான நோய்கள் பரவுவதை தடுக்கவும், கருத்தடை சாதனமாகவும் ஆணுறைகள் பெரிய அளவில் உதவுகிறது என்பது முற்றிலும் உண்மை.

Tap to resize

Latest Videos

undefined

இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா?

பொதுவாக கருத்தடை சாதனைகளை பயன்படுத்தும் பொழுது அதிக பாதுகாப்புடன் இருக்கத்தான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆகவே சிலர் இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது உண்டு. ஆனால் அறிவியல் பூர்வமாக இது மிக மிக தவறு என்பதுதான் உண்மை. காரணம் இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் பொழுது, அவை இரண்டுக்கும் இடையே அதிக அழுத்தமும், உராய்வும் ஏற்படும். இதனால் அவை இரண்டும் கிழிந்து அவை பயன்படுத்தப்படும் காரணமே வீணாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆணுறை பயன்படுத்துவதால் பாலியல் ரீதியான உணர்வுகள் குறையுமா?

இந்த சந்தேகம் பல ஆண்டுகளாக ஆணுறைகளை பயன்படுத்தும் தம்பதிகளிடையே இருக்கத்தான் செய்கிறது. அதாவது அடிக்கடி ஆணுறை பயன்படுத்துவதாக, தங்களிடம் உள்ள பாலியல் உணர்ச்சிகள் குறைந்து விடும் என்று எண்ணுகின்றனர். 

ஆனால் கடந்த 2007 ஆம் ஆண்டே, இந்தியானா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆணுறை பயன்படுத்துவதனால் எந்த விதமான பாலியல் இன்பங்களும் உணர்ச்சிகளும் குறைவதில்லை என்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். மகப்பேறு காலத்தை தடுக்கவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்களை தடுக்க மட்டுமே ஆணுறை பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!