ஆபாச படம் பார்ப்பதை நிறுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

By Asianet Tamil  |  First Published Aug 25, 2023, 7:03 PM IST

ஆபாச படம் பார்ப்பதை நிறுத்தினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.


கடந்த சில ஆண்டுகளாக ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்த இந்த காலக்கட்டத்தில் ஆபாச படம் பார்ப்பது எளிதாகி விட்டது. விளையாட்டாக ஆபாச படம் பார்க்கும் பலரும் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டால் உடலிலும் சரி, மனதளவிலும் சரி பல விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் ஆபாச படம் பார்ப்பதை நிறுத்தினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.

ஆற்றல் அதிகரிக்கும்

Tap to resize

Latest Videos

undefined

ஆபாச படங்களை அதிக நேரம் பார்ப்பதால் வேறு எந்த செயல்களிலும் உங்கள் கவனம் செல்லாது. எப்போதும் சோர்வாக உணர்வீர்கள்.. மேலும் சுய இன்பம் செய்வதால் ஆற்றல் வீணாகும். ஆனால் ஆபாச படங்களை பார்ப்பதை நிறுத்தினால் நேரம் கிடைக்கும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உங்களால் எதையும் செய்ய முடியும் என உணர முடியும். ஆபாச படங்களுக்கு அடிமையாக இருக்கும் போது அடிமைத்தனத்தில் இருக்கும் போது இயல்பாகவே பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். ஆனால் ஆபாச படம் பார்ப்பதை நிறுத்தினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கும். 

பெண்களுக்கு பிடிக்கும்

பெண்கள் நம்பிக்கையுள்ள ஆண்களை விரும்புகிறார்கள். பெண்களை மதிக்கும், பெண்மையை போற்றும் ஆண்களை பெண்களுக்கும் பிடிக்கும். நீங்கள் ஆபாசத்தைப் பார்ப்பதை நிறுத்தினால், அவர்கள் சுய மரியாதையை உணர்கிறார்கள். இது பெண்களுடன் உறவை நீண்ட தூரத்திற்கு எடுத்து செல்லும்.


நிஜ செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

ஆபாச படங்களை பார்ப்பதை நிறுத்தினால், உங்கள் நிஜ செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆபாச படம் பார்ப்பதால் உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிக்கும். இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கிறது. எனவே ஆபாச படம் பார்ப்பதை நிறுத்தினால் சுய இன்பத்தை விட உடலுறவு சிறந்தது என்ற உணர்வை அளிக்கும்.

வாழ்க்கையை ரசிக்கலாம்

ஆபாச படம் பார்ப்பதால் அதிக நேரம் வீணாகும். ஆனால் அதை நிறுத்திய பிறகு அதிக நேரம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை முழுதாக வாழ அனுமதிக்கிறது. நீங்கள் ஆபாசத்தில் இருக்கும்போது, உங்கள் புலன்கள் சரியாக செயல்படுவதில்லை. ஆபாசத்திற்கு அடிமையானவர்களின் மூளை ஸ்கேன் கடுமையான போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களைப் போன்றது. எனவே, நீங்கள் ஆபாச படம் பார்ப்பதை நிறுத்தியது உலகம் பிரகாசமாகவும், அழகாகவும், புதியதாகவும் தெரிகிறது.

click me!